ஜியோவுக்கு செம போட்டி Vi.. வோடஃபோன் ஐடியா வெளியிட்ட சரவெடி ஆஃபர்! ஆஹா.. பயங்கரம்! என்னென்னனு பாருங்க
சென்னை: இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி வோடாஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. ஜியோவுக்கு போட்டியாக வோடஃபோன் அறிவித்துள்ள செம ஆஃபர் என்னனு பார்க்கலாம் வாங்க..
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு நிறுவனங்களும் அதிரடி தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ.2,999க்கு ஒரு வருடம் முழுவதும் தினந்தோறும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால், ஸ்விக்கி ஆர்டரில் கூடுதல் தள்ளுபடி உள்ளிட்ட பிரத்யேக சலுகைகளை வழங்குவதாக அறிவித்தது.

ஜியோவுக்கு போட்டியாக செம ஆஃபர்களை வெளியிட்டிருக்கிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம். சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ரூ. 199க்கு மேல் உள்ள அனைத்து அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ்களிலும் 50 ஜிபி வரை கூடுதல் டேட்டா பலன்களை வழங்குகிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம்.
மேலும், வோடஃபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 'ஃப்ரீடம்' சலுகையின் ஒரு பகுதியாக ரூ.1449 மற்றும் ரூ.3,099 ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.50 மற்றும் ரூ.75 உடனடி தள்ளுபடிகளை பெறலாம். மேலும், 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா மற்றும் Sony Liv ஓடிடி தளத்துக்கான இலவச சந்தா ஆகியவையும் கிடைக்கும்.
இவற்றோடு கூடுதலாக, Vi ஆப்பில் பிரத்யேகமாக "ஸ்பின் தி வீல்" போட்டியும் நடத்தப்படும். இந்த போட்டியில், ஒவ்வொரு மணி நேரமும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் உறுதி செய்யப்படுவார். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி கொண்ட ரூ.3099 மதிப்புள்ள ஒரு இலவச ரீசார்ஜ் பேக்கை வெல்வார்கள் என வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம். பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, வெள்ளிக்கிழமை 2.5 ஜிபி டேட்டாவில் பயன்படுத்தாத மீதத்தை, வீக்கெண்ட் சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஸ்பின் வீல் சலுகை பிரத்யேகமாக Vi App-ல் மட்டுமே கிடைக்கும். இந்த 'ஃப்ரீடம்' சலுகைகள் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18, 2023 வரை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். ரூ. 199க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் ரீசார்ஜ் சலுகைகளை பெற, Vi நிறுவனத்தின் இணையதளம் அல்லது Vi ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications