ஜியோ இருக்கட்டும்.. வோடஃபோன் வழங்கும் அசத்தல் ரீசார்ஜ் பிளான்.. 1 வருடத்திற்கு OTT இலவசம்! சூப்பர்ல!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதிய ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம். இதில் ஒரு வருடம் முழுமைக்கும் இலவசமாக அமேசான் ப்ரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
புத்தாண்டு பிறப்பதையொட்டி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ.2,999க்கு ஒரு வருடம் முழுவதும் தினந்தோறும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால் ஆகியவற்றோடு, கூடுதலாக 24 நாட்களுக்கு இந்த வேலிடிட்டியை நீட்டித்து பிரத்யேக சலுகையை வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி, 365 நாட்கள் + கூடுதலாக 24 நாட்கள் என மொத்தமாக 389 நாட்கள் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் 5ஜி சேவை உள்ளிட்ட வசதிகளை ஜியோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். கிட்டத்தட்ட 1 மாத காலம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோவுக்கு போட்டியாக செம ஆஃபரை வெளியிட்டிருக்கிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம். VI நிறுவனம் தமது பிரீபெய்டு சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 3,199 ரீசார்ஜ் திட்டத்தில், மற்ற பலன்களோடு கூடுதலாக, ஒரு ஆண்டுக்கு இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
அதாவது இந்த பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, வார நாட்களில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவில் பயன்படுத்தாத மீதத்தை, வீக்கெண்ட் சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம், Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாள் முழுவதும் 9 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு வருடம் முழுவதும் தினசரி 2 ஜிபி நெட், இரவில் அன்லிமிட்டெட் நெட் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளமான அமேசான் ப்ரைம் வீடியோ சேவைகளை அனுபவிக்க முடியும் என்று Vi நிறுவனம் கூறியுள்ளது.
இதேபோல, வோடஃபோன் ஐடியாவின் ரூ.3,099 ப்ரீபெய்டு திட்டமானது ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றோடு, ஒரு வருடம் முழுமைக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக வழங்குகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications