ஜெயிச்சது கெடக்கட்டும்..வாக்கு சதவீத ’வாக்கு’வாதம்! கட்சிகளின் Vote பாலிடிக்ஸ்.. 2014 To 2024 வரை..
சென்னை: தேசிய அளவில் பாஜக கூட்டணி கட்சி ஆதரவோடு ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து எந்த கட்சியும் ஆட்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணிகள் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் தற்போது தாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்தான விவாதங்களில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014, 2019, 2024 தேர்தல்களில் அரசியல் கட்சியில் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரங்களை பார்க்கலாம்..
தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி எழும்பிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது
வாக்கு சதவீதம்: முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை ஸ்வைப் செய்திருக்கும் நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்த விவாதங்கள் தற்போது அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதிமுக: கடந்த காலங்களில் 2014ஆம் ஆண்டு தவிர்த்து அதிமுக கூட்டணி கட்சிகள் மூலமே மக்களவைத் தேர்தலை சந்தித்து இருக்கிறது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி 44.92 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அப்போது சுமார் 37 எம்பிக்களை அந்த தேர்தலில் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 19.39 சதவீத வாக்குகளை பெற்றது. தற்போதைய தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் சற்றே அதிகரித்து 20.46 ஆக இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத ஒரு காலத்தில், பெரிய அளவிலான அரசியல் தலைவர்கள் வெளியேறிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சதவீத வாக்கை அதிகரித்து இருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
திமுக: திமுக 2014 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தாலும் 2019ல் பெரு வெற்றி பெற்றது. 2024 தேர்தலிலும் யாரும் சாதிக்க முடியாத சாதனையாக 40க்கு 40 தொகுதிகளை வென்றிருக்கிறார் திமுக தலைவர் முதலமைச்சருமான ஸ்டாலின். அந்த வகையில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் சற்றே குறைந்திருக்கிறது. காரணம் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அந்த கட்சியின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த வகையில் 2014ஆம் ஆண்டு 27.18 ஆக இருந்த அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 2019ல் 33.52ஆக அதிகரித்தது. தற்போது 26.93 சதவீதமாக இருக்கிறது.
பாஜக: தற்போதைய சூழலில் இரு கட்சிகளுக்கும் அடுத்து அதிக வாக்கு சதவீதம் கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றனர். அப்படி பார்க்கும்போது அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 11.24 ஆக இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 3.62 என்பதும் 2014ல் 5.56 என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர்: இந்த தேர்தலில் பெரிய அளவில் வாக்குகளை பெற்றிருக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். தற்போதைய தேர்தலில் சுமார் 35 லட்சம் வாக்குகளை அந்த கட்சி பெற்றிருக்கிறது. வாக்கு சதவீதம் 8.19 ஆக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அந்த கட்சி வெறும் 3.89 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்த நிலையில் தற்போது சுமார் 5% வாக்குகளை அந்த கட்சி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாநில கட்சி அந்தஸ்தையும் அந்த கட்சி எட்டி இருக்கிறது.
காங்கிரஸ்: வாக்கு சதவீதத்தில் நான்காவது இடத்தில் தமிழகத்தில் இருப்பது காங்கிரஸ். ஆனால் அந்த கட்சி இதுவரை தனித்து களம் கண்டதில்லை. 2014 ஆம் ஆண்டு கூட்டணியின்றி போட்டியிட வேண்டிய சூழலில் படுதோல்வியை சந்தித்தது. அப்போது அந்த கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 4.37 தான். அதற்கு பிறகாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 12.72% வாக்குகளை பெற்றது. தற்போதைய தேர்தலில் 10.67 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாமக - தேமுதிக: இதற்கு அடுத்ததாக பாமக 2014 ஆம் ஆண்டு 4.51 சதவீத வாக்குகளையும், 2019ல் 5.36 சதவீத வாக்குகளையும், 2024ல் 4.4% வாக்குகளையும் பெற்றிருக்கிறது. தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே இருக்கிறது. 2014 தேர்தலில் 5.19 சதவீத வாக்குகளும், 2019ல் 2.17 சதவீத வாக்குகளும் 2024ல் 2.59 சதவீத வாக்குகளையும் அந்த கட்சி பெற்றிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள்: தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணியை நம்பியே இறங்குகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த வகையில் 2014ல் 0.55 வாக்குகளை பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 2019 ஆம் ஆண்டில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஒன்றாக அதிகரித்தது. 2024ல் 2.15 ஆக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் 2014ல் 0.55 இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் அது 2.28 அதிகரித்தது, தற்போதைய தேர்தலில்2.52 இருக்கிறது. இது தவிர விடுதலை சிறுத்தைகள், யூனியன் முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும் குறிப்பிட்ட வாக்கு வங்கியை தமிழகத்தில் கொண்டிருக்கின்றன.
-
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications