2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் 2021 சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக கடந்த முறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது.. ஆனால் இந்த முறை எட்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும்.. அவர்களுக்கு 2026 ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
2021 சட்டசபை தேர்தலை போல் 2026 சட்டசபை தேர்தல் அதிமுக, திமுக இரண்டு கூட்டணி கட்சிகளுக்குமே எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் சென்ற முறை வெறும் 2 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது. எனவே கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் இருகட்சிகளுமே ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில் விஜய் தவெக என்ற கட்சியைஆரம்பித்து தனியாக களம் இறங்கி உள்ளார். அவர் திமுக, அதிமுக ஆகியோரின் ஆதரவு தளத்தில் உள்ள வாக்குகளை பிரிப்பார் என்று கூறப்படுகிறது.

இதனால் இருகட்சிகளுமே ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுமே இந்த முறை மிக முக்கியம் என்பதை உணர்ந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. திமுக இந்த முறை வழக்கத்தைவிட பெரிய அளவில் கூட்டணியை உருவாக்கி உள்ளது. கடந்தமுறை இருந்த கூட்டணியைவிட இந்த முறை கூடுதலாக தேமுதிக, மக்கள் நீதிமய்யம் போன்ற கட்சிகளை இணைத்துள்ளது. இது இல்லாமம் அதிருப்தி அதிமுக தலைவர்களையும் தன் கட்சியில் சேர்த்துள்ளது.
திமுக கூட்டணியில் 2021 சட்டசபை தேர்தல் முடிவுகளின் படி கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும், அவர்களுக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் விவரமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேமுதிகவிற்கு 10 தொகுதிகளும், ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டத்தை திமுகவினர் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். வாக்குசதவீதம் எந்த கட்சி எவ்வளவு வாங்கியது. கமல்ஹாசனின் போட்டியிடவில்லை என்று 2021ல் வைகோ பாணியில் தேர்தலை புறக்கணித்திருப்பது ஏன் என்பதை பார்ப்போம்.
2021 சட்டசபை தேர்தலில் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக அந்தத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிட்டது. மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட்டது. 2,00,157 வாக்குகள் பெற்றது. வாக்குசதவீதம் 0.43% ஆகும். தேமுதிக போட்டியிட்ட 60 தொகுதிகளில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 0.43% வாக்குகள் பெற்ற தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு ராஜ்யசபா சீட் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வென்றது. 4.27% சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு ராஜ்யசபா சீட் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. விஜய்யின் தவெக கட்சியை கட்சி பேரம் பேசி கடந்த முறையைவிட 3 தொகுதிகளை கூடுதலாக காங்கிரஸ் பெற்றுள்ளது.
அடுத்ததாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சுமார் ஒரு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை எட்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடுமையான பேச்சுவார்த்தை முயற்சிக்கு பின்னரே 8 தொகுதிகள் பெற விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புக்கொண்டார்.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் எத்தனை சதவீதம் என்பது சரியாக இல்லை.. எனினும் இந்த முறை 4தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதியில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. 1.09% சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை 5 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்றது. 0.86% வாக்குகளை பெற்றது. தற்போது 5 தொகுதிகளை பெற்றுள்ளது. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 177 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிலும் ஜெயிக்கவில்லை... 2.43% வாக்குகள் பெற்றது. ஆனால் ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை.. வைகோ பாணியில் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications