பிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக !
அதிமுகவின் வாக்குகள் சிதறி அமமுகவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற கவலையில் இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.. அது நடந்து முடிந்த தேர்தலை பற்றியும், நடக்க போகிற 4 இடைத்தேர்தலை பற்றியும்தான்!
எம்பி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக படு சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தது. இதில் எல்லா தொகுதிகளிலும், பிரதான கட்சிகள் பணத்தை வாரி இறைத்தாகவும் சொல்லப்பட்டது.
அதிமுக குறைந்தது 1500 ரூபாயாம், இதற்கு அடுத்து திமுகவாம், இதற்கு அடுத்துதான் அமமுக பணம் செலவு செய்ததாம். ஆக மொத்தம் இருக்கும் 3 கட்சிகளில் அதிகமாக பணத்தை இறக்கியது அதிமுகதான் என்ற தகவல் வந்தது. இதற்கு காரணம், மானப்பிரச்சனை, கவுரவ பிரச்சனை, இருக்கும் 2 வருட ஆட்சியை விட்டுவிட கூடாதே என்ற கவலை போன்றவைதான்!

விநியோகம்
ஆனால் சில இடங்களில் ஓட்டுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மக்களுக்கு சரியாக பிரித்து தரப்படவில்லை என்றும், பொறுப்பில் உள்ளவர்களே அந்த பணத்தை சரியாக விநியோகிக்காமல் அமுக்கி விட்டதாகவும் புகார்களும் எழுந்தன. இப்போது விஷயம் என்னவென்றால், பணத்தை கொட்டியும் நல்லபடியான பாசிட்டிவ் தகவல் அதிமுக தலைமைக்கு போய் சேரவில்லை என்பதுதான்.

இரண்டு பிரிவு
அதாவது அதிமுகவுக்கு ஓட்டு வங்கி குறைவாகத்தான் இருக்கும் என்று ஒரு தகவல் வருகிறது. இதற்கு காரணம் அமமுகதான். அதிமுக இரண்டாக உடைந்ததுதான் முக்கிய பலவீனமே. அதனால்தான் அதிமுகவின் தீவிர தொண்டர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு ஒரு குரூப்பும், அமமுகவுக்கு ஒரு குரூப்பும் என வாக்கு சிதறி விட்டது.
|
பாக்கியம்
அதிலும் தினகரனுக்கு இதில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆதரவு கிடைக்கும் போல தெரிகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்ணின் வீடியோ உள்ளது. ஓட்டுக்கு அதிமுக கொடுத்த பணம் என்பதும், ஓட்டு போடவில்லை என்றதும் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொள்வதும் என இரண்டு விஷயத்தையுமே பாக்கியம் போட்டு உடைத்துவிட்டார்.

துப்பாக்கி சூடு
அது மட்டுமில்லை, அமமுக மீது என்னத்தையாவது ஒரு பழியை போட வேண்டும் என்ற பேரில், அதிமுக பண பட்டுவாடா என்ற பெயரில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அதில் துப்பாக்கி சூடு வரை சென்று கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. கடைசியில் இது அமமுகவுக்கு அனுதாபத்தையே தேடிவந்து அக்கட்சிக்கு மேலும் பிளஸ் ஆகிவிட்டதுதான் மிச்சம்!

பணம் பாய போகிறதாம்
அதனால் வரப்போகிற அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் என்ற 4 இடைத்தேர்தலிலாவது வெற்றியை பிடிக்க வேண்டும் என்று அடுத்த மும்முரத்தில் அதிமுக இறங்கி உள்ளது. அப்படியானால் பணம் பாதாளம் வரைக்கும் பாய போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பீதி இப்போதே கிளம்பிவிட்டதாம்!
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications