39.9% வாக்குகளை பெறும் அதிமுக.. 114 முதல் 124 தொகுதிகளை வெல்லும்.. Vote Vibe Exit Poll கணிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் என்று Vote Vibe எக்ஸிட் போல் கணிப்பு வெளியாகி இருக்கிறது. திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகள் வரை வெல்லும் என்று, தவெக 4 முதல் 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதிலும் அதிமுக 39.9% வாக்குகளையும், திமுக 38.9% வாக்குகளையும், தவெக 15.8% வாக்குகளையும், நாதக 3.5% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 85.15 சதவிகிதம் பேர் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இந்த முறை 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதேபோல் ராமதாஸ் - சசிகலா தனி கூட்டணி அமைத்தனர். கிருஷ்ணசாமியும் தனித்தே களமிறங்கினார். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் விஜய் கடுமையான சவால் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட சட்டசபைத் தேர்தலை முடிவடைந்த சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் என்று Vote Vibe எக்ஸிட் போல் கணிப்பு வெளியாகி இருக்கிறது.
திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகள் வரை வெல்லும் என்று, தவெக 4 முதல் 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதிலும் அதிமுக 39.9% வாக்குகளையும், திமுக 38.9% வாக்குகளையும், தவெக 15.8% வாக்குகளையும், நாதக 3.5% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இதனால் வெற்றி, தோல்வி இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications