மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின்.. வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் திரும்பியும் அனுப்பப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல்
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், 3 ஆண்டுகள் தாமதமாக 2019இல் தான் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும்கூட ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டன. 2019இல் நடத்தப்பட்ட தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

எப்போது தேர்தல்
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், செப். 15 தேதிக்குள் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் தேதி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் நேரு குறிப்பிட்டிருந்தார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் புதிய வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் மொத்தம் 37,77,524 ஆண்கள், 38,81,361 பெண்கள், 835 திருநங்கைகள் என மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரத்தில் அதிகம்
இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 6,87,420 ஆண்கள், 6,96,115 பெண்கள், 152 திருநங்கைகள் உட்பட மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,29,959 ஆண்கள், 3,34,115 பெண்கள், 34 திருநங்கைகள் உட்பட மொத்தம் 6,64,108 வாக்காளர்கள் உள்ளனர்.
-
நத்தம் புறம்போக்கு நில விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் திருப்பம்? பட்டா "இடி"க்கு விடிவு வருமா? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications