இதெல்லாம் நடிப்பா கோபால்.. SIR எல்லாம் டம்மியா? இறந்து 4 ஆண்டாகியும் ஓட்டர் லிஸ்டில் புலமைப்பித்தன்!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision - SIR) மூலம் மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision - SIR) தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கடும் அதிர்ச்சியையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
ஒருபுறம் லட்சக்கணக்கான உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், மறுபுறம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்த ஒரு பிரபலத்தின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
தமிழகத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் செயல்படுத்தியது. இதற்கு முன்பு, பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தேர்தலுக்கு முன் இத்தகைய பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம் ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இருப்பினும், அந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தமிழகத்திலும் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டது.
எஸ்ஐஆர் சர்ச்சை
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கினர். அந்தப் படிவங்களை நிரப்பி திரும்பப் பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது. இதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் நீக்கம் விவகாரம்
ஆனால், அதே நேரத்தில் 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 15.18 சதவீதம் ஆகும். தேர்தல் ஆணையத்தின் விளக்கப்படி, நீக்கப்பட்டவர்களில் சுமார் 26.94 லட்சம் பேர் இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தனை பெரிய அளவிலான நீக்கம் உண்மையிலேயே சரியானதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
புலமைப்பித்தன்
இந்த சூழலில்தான், 2021 ஆம் ஆண்டு காலமான பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புலமை பித்தன், அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தவர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வசித்து வந்த அவர், இலக்கியமும் அரசியலும் இணைந்த ஒரு முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர். இப்படி ஒரு பிரபலத்தின் பெயரே நீக்கப்படாமல் தொடர்வது, சாதாரண மக்களின் பெயர்கள் எத்தனை தவறாக நீக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை பலப்படுத்துகிறது.
SIR நடவடிக்கை
இதனால், SIR நடவடிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் நீக்கப்படுவதும், இறந்தவர்கள் பெயர் தொடர்வதும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 2026 தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்றால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள தவறுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக தற்போது எழுந்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications