‘SIR’ இன்றே கடைசி.. பெயர் மிஸ்ஸானால் இனி ஓட்டு போடவே முடியாதா? ஒரே ஒரு சான்ஸ் மட்டும் தான் இருக்கு!
சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் பணியில், வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றுக்குள் படிவங்களை வழங்காவிட்டால் அவர்கள் பெயர் அடுத்து வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படாது. அதே நேரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவேளை வாக்காளரின் பெயர் விடுபட்டிருந்தால், அதற்குப் பிறகு உரிய ஆவணங்களை சமர்பித்து பெயரினை சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலை நடத்துகிறது. ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் SIR பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பூட்டு லெவல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கணக்கிட்டு படிவங்களை வழங்கினர்.

வாக்காளர் பட்டியல்
இந்த படிவத்தில் வாக்காளரின் பெயர் முகவரி, ஆதார் எண், 2002 ஆண்டில் இருந்த உறவினரின் பெயர் மற்றும் விபரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த படிவத்தை பி.எல்ஓக்களிடம் வழங்கியதும், வாக்காளரின் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம், தவறான பதிவுகள் நீக்குவது, இறந்தவர்கள் பெயர் நீக்குவது, இருமுறை பதிவு நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எஸ்ஐஆர் அவகாசம்
தமிழகத்தில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,41,10,380 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று வரையில் 6,40,83,414 படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 99.95 சதவீதம் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு விட்டன். எனினும், இன்னும் சில ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே தங்களின் படிவங்களைச் சமர்ப்பிக்காமல் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
இதுவரை பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்தவர்கள், உயிரிழந்தவர்கள், பழைய முகவரியில் வசிக்காதவர்கள், மற்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம்
அந்த பட்டியலில், வார்டு தொடங்கி, மண்டலம், சட்டமன்றம் மற்றும் மாவட்ட வாரியாக, நீக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை அந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, வரைவு பட்டியல் வெளியான பிறகு, தேவையான ஆவணங்களை அளித்து பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையம் தனி அவகாசம் வழங்கும். அதன்பின்னர் ஜனவரி மாதத்தில் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கும்.
2026 தேர்தல்
அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இடம்பெறாவிட்டால், வரும் 2026 தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியாது. அதனால் தான், இன்று வரை வழங்காதவர்கள், இன்றும் அந்த வாய்ப்பை தவறவிட்டால் கூடுதல் சிரமம் உருவாகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வரைவு பட்டியல் வெளியானதும், வாக்காளர்கள் தங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். அதில், தவறுகள் இருந்தால் உடனடியாக புகாரளிக்குமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications