2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கடந்த 2019ல் பதிவானதை விட சுமார் 3 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடந்த தேர்தலை விட 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அதிகபட்சமாக வாக்குப் பதிவான தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் 82.33% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆக, கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறையை விட அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மற்ற 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது தெரியவருகிறது.
வட சென்னை தொகுதியில் 2019இல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளது அதேபோல தென் சென்னையில் 2019இல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 54.27% வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.98% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. மற்ற தொகுதிகளின் விவரங்களை பார்க்கலாம்.

திருவள்ளூர் தொகுதியில் 2019இல் 72.33% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இப்போது 68.31%, ஸ்ரீபெரும்புதூர் 2019இல் 62.43%, இப்போது 60.21%.. காஞ்சிபுரத்தில் 2019இல் 75.31%, இப்போது 71.55%.. அரக்கோணம் தொகுதியில் 2019இல் 78.54%, இப்போது 74.08%.. வேலூர் தொகுதியில் 2019இல் 71.32%, இப்போது 2024ல் 73.42% கிருஷ்ணகிரி தொகுதியில் 2019இல் 75.95%, இப்போது 72.96%... தருமபுரி தொகுதியில் 2019இல் 82.41% சதவிகிதம், இப்போது 81.48%, திருவண்ணாமலை தொகுதியில் 2019இல் 78.15%, இப்போது 73.88%.. ஆரணி தொகுதியில் 2019இல் 79.01% இப்போது 75.65% வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதேபோல விழுப்புரம் 2019இல் 78.66%, இப்போது 76.47%... கள்ளக்குறிச்சி தொகுதியில் 2019இல் 78.81%, இப்போது 79.25%... சேலம் தொகுதியில் 2019இல் 77.91%, இப்போது 78.13%.. நாமக்கல் தொகுதியில் 2019இல் 80.22%.. இப்போது 78.16%, ஈரோடு தொகுதியில் 2019இல் 73.11% இப்போது 70.54%, திருப்பூர் தொகுதியில் 2019இல் 73.21% இப்போது 70.58%, நீலகிரி தொகுதியில் 2019இல் 74.01% இப்போது 70.93%.. கோவை தொகுதியில் 2019இல் 63.86%, இப்போது 64.81%.. பொள்ளாச்சி தொகுதியில் 2019இல் 71.15%, இப்போது 70.70% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
திண்டுக்கல் தொகுதியில் 2019இல் 75.29% இப்போது 70.99%.. கரூர் தொகுதியில் 2019இல் 79.55% இப்போது 78.61%, திருச்சி தொகுதியில் 2019இல் 69.5% இப்போது 67.45%, பெரம்பலூர் தொகுதியில் 2019இல் 79.26% இப்போது 77.37%, கடலூர் தொகுதியில் 2019இல் 76.49% இப்போது 72.28%, சிதம்பரம் தொகுதியில் 2019இல் 77.98% இப்போது 75.32%, மயிலாடுதுறை தொகுதியில் 2019இல் 73.93% இப்போது 70.06%, நாகப்பட்டினம் தொகுதியில் 2019இல் 76.93% இப்போது 71.55%, தஞ்சாவூர் தொகுதியில் 2019இல் 72.55% இப்போது 68.18%, சிவகங்கை தொகுதியில் 2019இல் 69.9%, இப்போது 63.94% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மதுரை தொகுதியில் 2019இல் 66.09% இப்போது 61.92%, தேனி தொகுதியில் 2019இல் 75.27% இப்போது 69.87%, விருதுநகர் தொகுதியில் 2019இல் 72.49% இப்போது 70.17%, ராமநாதபுரம் தொகுதியில் 2019இல் 68.4% இப்போது 68.18%, தூத்துக்குடி தொகுதியில் 2019இல் 69.48% இப்போது 59.96%, தென்காசி தொகுதியில் 2019இல் 71.43% இப்போது 67.55%, திருநெல்வேலி தொகுதியில் 2019இல் 67.22% இப்போது 64.10%, கன்னியாகுமரி தொகுதியில் 2019இல் 69.9% இப்போது 65.46% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications