தொடங்கியது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு.. 33 பதவிகளுக்கு 100 பேர் கடும் போட்டி!
சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தொடங்கி உள்ளது. இராம. நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிடுகின்றன. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் வாக்களிக்கின்றனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி 2026 - 2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

தயாரிப்பாளர் சங்க சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை இராம நாராயணன் அணி மற்றும் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 1524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆவர். இராம நாராயணன் அணியில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். செயலாளராக டி.டி.ராஜா, சௌந்திரபாண்டியன், துணைத் தலைவர்களாக விஜய் முரளி, மதியழகன், பொருளாளராக சி.வி.குமார், ஜாய், இணைச் செயலாளராக தயா பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 26 பேர் போட்டியிடுகின்றனர்.
நலம் காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் போட்டியிடுகிறார். செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணைத் தலைவர் பதவிக்கு கமலக்கண்ணன், ஆர்கே சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணை செயலாளராக சுஜாதா விஜயகுமார் போட்டியிடுகின்றனர். மற்றும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இதுதவிர சுயேட்சை வேட்பாளராகவும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மேலும் கதிரேசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், உள்ளிட்டோரும் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications