Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் போட்டோ இடம்பெறும்.. தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட மேஜர் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுகே முன்னுதாரமான தேர்தலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்ற நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Voting Machines to Display Colour Photos of Candidates Says CEC Gyanesh Kumar

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர். தேர்தல் ஆணையர், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேதியை நிர்ணயிப்பதாக உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, அரசின் உயர் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக விளக்கினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஞானேஷ் குமார், "ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகள் நாட்டுகே முன்னுதாரணமாக நடைபெற்றது. அந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும். தேர்தலுக்காக அமைக்கப்படும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது. அதேசமயம் செல்போன் கொண்டு வருபவர்கள் கொடுத்துச் செல்ல செல்போன் பாதுகாப்பகம் அமைக்கப்படும்.

சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு சதவிகிதம் வெளியிடப்படும். மேலும் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் கண்காணிக்கப்படும். எனவே தேர்தல் அதிகாரிகள் எந்தவித அச்சமும் இன்றி செயல்படலாம்.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள் இந்த தேர்தலில் கடைசி 2 சுற்று வாக்குகள் இருக்கும்போது எண்ணப்படும். அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் 20 முதல் 29 வயதான வாக்காளர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். அதேசமயம் 19 முதல் 20 வயதிலான வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.

மொத்தம் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.90 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து 267 பேர் தான் மேல்முறையீடு செய்திருந்தனர். 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார்கள். எந்த வாக்குச்சாவடியிலும் 1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். வாக்கு எண்ணும்போது வேட்பாளர் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் விவிபேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+