பொய் கேஸ் போட்டாலும் கவலை இல்ல.. ஜூலையில் திமுக அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல்! விபி.துரைசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்து பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

 யோகா தினம்

யோகா தினம்

யோகா தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் நாளைய தினம் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜக சார்பில் பல்வேறு ஊர்களிலும் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி

இந்தச் சூழலில் சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினால், நாளை 8ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் பாஜக சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதேபோல தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 அடுத்து ஜூலை மாதம்

அடுத்து ஜூலை மாதம்

தமிழ்நாட்டில் 4 மத்திய அமைச்சர்கள் நாளைய யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளதாகக் கூறினார். மேலும், அண்ணாமலை மீது எவ்வளவு வழக்குகளை திமுக போட்டாலும் அதை அவர் சந்திப்பார் என்றும் திமுக அரசின் அடுத்த ஊழல் பட்டியல் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அக்னிபாத்

அக்னிபாத்

நாட்டின் பாதுகாப்பு கருதி இளமைத்துடிப்பான ராணுவத்தை உருவாக்க அக்னிபாத் திட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், தேச பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் போராட்டம் நடத்துவது சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர் சாடினார்.

கச்சத்தீவு

கச்சத்தீவு

அடுத்த மக்களவை தேர்தல் வரும் 2024 நடைபெற உள்ள நிலையில், அதற்குள் பிரதமர் மோடி நிச்சயம் கச்சத்தீவை மீட்பார் என்றும் அவர் கூறினார். இலங்கையில் இப்போது பெரும் பொருளாதார நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் ஒரு வேலை உணவுக்கே தவிக்கும் நிலையில், இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவி வருகிறது. இந்தச் சூழலில் கச்சத்தீவு தொடர்பாக வி.பி.துரைசாமி கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+