வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.. பல ஆயிரம் refund வரும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ITR பக்கத்தின் E Filling திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஜூன் 15க்கு பின் வருமான வரி தாக்கல் செய்வதே சரியாக இருக்கும். இதற்கு பின் காரணங்கள் உள்ளன,

வருமான வரி ITR தாக்கல் செய்யும் காலம் வந்துவிட்டது. பழைய வருமான வரி முறையை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில் இந்த முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

Wait till Jun 15 to get more of ITR returns while filing Income Tax Returns ITR

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

தொடங்கப்பட்ட E Filling:

வருமான வரி ITR பக்கத்தின் E Filling திறக்கப்பட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4க்கான பக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதாவது சம்பளதாரர்கள், HUFகள், மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் இதன் மூலம் வருமான வரி தாக்கலை மேற்கொள்ள முடியும். இன்றில் இருந்து வருமான வரி ITR இதனால் தாக்கல் செய்ய முடியும்.

ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய வருமான வரி ITR கடந்த வாரம் முதல்தான் தொடங்கி உள்ளது. ITR தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் பார்ம் 16 சம்பளதாரர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இப்போது தாக்கல் செய்ய கூடாது?

பல சம்பளதாரர்கள் தங்கள் நிறுவனத்திடம் இருந்து படிவம் 16 அல்லது TDS சான்றிதழைப் பெற காத்திருக்கிறார்கள். படிவம் 16 என்பது ஒரு முக்கியமான TDS சான்றிதழாகும். ஒரு நிதியாண்டில் பணியாளருக்கு செலுத்தப்பட்ட சம்பள வருமானம், மூலத்தில் வரி விலக்கு பெறத் தேர்ந்தெடுத்த வரி முறை மற்றும் ஊழியர் சம்பள வருமானத்திலிருந்து கோரிய விலக்குகள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.

படிவம் 16 என்பது பணியாளர் ஒருவருக்கு மூலத்தில் கழிக்கப்பட்ட வரியின் சான்றிதழாகும். எந்த ஒரு நிறுவனமும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் படிவம் 16 ஐ வழங்குவது கட்டாயமாகும். படிவம் 16 ஐ சரியான நேரத்தில் வழங்கத் தவறினால், தவறும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நாளைக்கு ரூ. 500 அபராதம் அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்படும். சிலருக்கு மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் தரப்பட வேண்டும் . இதற்கு மே 31க்கு பிறகே அதற்கு விண்ணப்பிக்க முடியும். அது வருவதற்கு எப்படியும் ஜூன் 2ம் வாரம் ஆகிவிடும். எனவே பார்ம் 16 பொதுவாக ஜூன் 15ம் தேதிக்கு முன்பாக உங்கள் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

இதனால் ஜூன் 15க்கு பின் வருமான வரி தாக்கல் செய்வதே சரியாக இருக்கும். ஏனென்றால் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டிற்கான வருமான வரி இன்னும் உங்கள் வருமான வரி கணக்கில் சேர்க்கப்பட்டு இருக்காது. அதனால் ஜூன் 15 வரை காத்திருக்கவும். இதனால் உங்களுக்கு வரக்கூடிய refund பல ஆயிரங்களாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+