வீடு வாங்கிட்டீங்களா? மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யலாமா? என்னென்ன டாக்குமென்ட் தேவை?
சென்னை: புதிதாக வீடு வாங்கியதும் மின் இணைப்பு பெயரை உரிமையாளரின் பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைனில் மிகவும் எளிதானதாகும். இது குறித்த விவரங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இதுதான் நடைமுறையில் உள்ளது. எனினும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த பெயர் மாற்றம் செய்ய கட்டணமாக ஜிஎஸ்டியுடன் ரூ 726 வசூலிக்கப்பட்டு வந்தது. பொதுவாக ஒரு வீட்டை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியதும் அவர் பெயரில் இருக்கும் அனைத்தையும் நம் பெயருக்கு மாற்றுவோம். அந்த வகையில் அவருடைய பெயரில் இருக்கும் மின் இணைப்பு வீடு வாங்கியவரின் பெயரில் மாற்றம் செய்ய tangedco.org என்ற இணையதளத்தில் போய் ஆன்லைன் சர்வீசஸ்- எக்ஸிஸ்டிங் சர்வீஸ் கனெக்ஷன், டேரிஃப் சேஞ்ச் ஆகியவற்றில் போய் மாற்ற வேண்டும்.

இல்லாவிட்டால் https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=NT என்ற லிங்கில் போய் உங்கள் போன் நம்பரையும் வாடிக்கையாளர் பெயரையும் கொடுத்தால் ஒரு ஓடிபி வரும் அதை பதிவு செய்து பிறகு அங்கு கேட்கும் தகவல்களை கொடுக்கலாம்.
பெயர் மாற்றம் செய்ய என்னவெல்லாம் ஆவணங்கள் தேவை தெரியுமா? ஆதார் அட்டை, சொத்து வரி ரசீது நகல், விற்பனை பத்திரத்தில் ஜெராக்ஸ் நகல், செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று, அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் அதையும் பயன்படுத்தலாம்.
யாராவது இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மாற்றுவதற்கு செட்டில்மென்ட் பத்திரம், வாரிசு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications