வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடையில் என்ன பொருள் தர்றாங்கன்னு தெரிஞ்சிக்கணுமா? சூப்பர் ஐடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிலிருந்தபடியே உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா அல்லது மூடியிருக்கிறதா என்பதை அறிய வேண்டுமா, இதோ ஒரு சூப்பர் தகவல்!

நியாய விலை கடைகள் மொத்தம் 4.99 லட்சம் கடைகள் நாடு முழுவதும் உள்ளன. இந்த கடைகளை மத்திய அரசும் மாநில அரசும் நிர்வகித்து வருகிறது. கூட்டுறவுத் துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைகேற்ப நியாய விலை கடைகள் அமைந்துள்ளன.

Want to check whether ration shop is opened or closed

இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை பெற குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு முக்கியமானதாகும். வெங்காயம், தக்காளி விலை அதிகரித்தாலும் கூட இந்த ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயம், தக்காளியும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்கள், ரூ 1000 உரிமைத் தொகை, மிக்ஜாம் புயல் நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு போய் இங்கு பொருட்களை வாங்க வேண்டும். அந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கியதும் கார்டில் என்ட்ரி போட்டு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு ஸ்மார்ட்கார்டாக வந்துவிட்டது. இதனால் நாம் வாங்கும் பொருட்கள் நாம் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு மெசேஜாக வந்துவிடும்.

Want to check whether ration shop is opened or closed


ரேஷன் பொருளை வாங்குவது சரியான நபர்தானா என்பதை அறிய கை ரேகையும் பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பலர் இந்த கடைகளுக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார்கள். அது போல் ரேஷன் கடையில் என்ன உணவு பொருட்களை கொடுக்கிறார்கள் என்பதையும் தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

கடைகளில் என்ன பொருட்கள் இருக்கின்றன. ரேஷன் கடை திறந்திருக்கிறதா இல்லை மூடியிருக்கிறதா என்பதை அறிய சுலபமான வழியை பார்க்கலாம். நீங்கள் ரேஷன் கடையில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிலிருந்து 09773904050 என்ற எண்ணுக்கு PDS 101 என அனுப்பினால் உங்கள் ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்ற தகவல் வரும்.

அதாவது அந்த கடையில் அரிசி எத்தனை கிலோ ஸ்டாக் இருக்கிறது, துவரம் பருப்பு எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களும் வரும். அது போல் PDS 102 என டைப் செய்து அனுப்பினால் உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா இல்லை மூடியிருக்கிறதா என்பது தெரியவரும். அது போல் PDS 107 என டைப் செய்து அனுப்பினால் ஒரு வேளை நீங்கள் பொருளை வாங்கவில்லை ஆனால் நீங்கள் வாங்கிவிட்டது போல் மெசேஜ் வருகிறது என்ற புகாரை அளிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+