Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உழைப்பை மூலதனமாகக் கொண்டு வெற்றிப்படிக்கட்டில் படிப்படியாக ஏறிய எச். வசந்தகுமார்

தரமான பொருளை குறைவான விலையில் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் நாடி வருவார்கள் என்பதை உணர்ந்து உழைப்பை மூலதனமாக்கி வெற்றி பெற்றவர் எச். வசந்தகுமார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச். வசந்தகுமாரின் வெற்றி சாதாராணமானதல்ல மளிகைக்கடையில் தொடங்கி மக்களவை உறுப்பினர் வரை தனது வெற்றிப்பாதையில் பல மேடு பள்ளங்களை பார்த்தவர். உண்மை உழைப்பை மூலதனமாக்கி படிப்படியாக வெற்றிப்படிக்கட்டில் ஏறியவர். அவரது வெற்றிக்கதையை பின்பற்றி பலரும் தங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

Recommended Video

    தமிழகத்தின் பிஸ்னஸ் மேக்னட்.. யார் இந்த வசந்தகுமார்!? | Oneindia Tamil

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம் பி எச். வசந்தகுமாரின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குடியரசுத்தலைவர், பிரதமர், பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் பொதுமக்கள், தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    சர்பத் கதை, மளிகைக்கடை என வாழ்க்கையை தொடங்கி தவணை முறை பொருட்களை விற்பனை செய்யும் கடையில் விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கை மாற்றி சொந்தமாக கடை ஆரம்பித்து இன்றைக்கு பல கிளைகளை தொடங்கி வெற்றி பெற்ற வசந்தகுமார் வர்த்தகர் மட்டுமல்ல மனிதநேயம் கொண்ட அரசியல்வாதி. எளிமையான பண்புதான் பலரையும் கவர்ந்துள்ளது.

    வசந்தகுமார் வெற்றிக்கதை

    வசந்தகுமார் வெற்றிக்கதை

    வசந்தகுமார் படிப்படியாக வெற்றிப்படிக்கட்டில் ஏறியவர் விற்பனையில் அனுபவம் கொண்ட அவருக்கு முதலீடு செய்ய பணம் இல்லை. அவரது ஒரு வாடிக்கையாளர்தான் வசந்தகுமாருக்கு தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள தனது கடையை, 8,000 ரூபாய்க்கு விற்க முன்வந்தார். நிலுவைத் தொகையை செலுத்த வசந்தகுமாருக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்தார். மற்றொரு வாடிக்கையாளர் அவருக்கு 22 ரூபாய் கொடுத்தார் அந்த பணம்தான் அவருக்கு மூலதனம்.

    1978 ஆம் ஆண்டில் உருவானது வசந்த் அண்ட் கோ நிறுவனம். அவர் விற்கத் தொடங்கிய முதல் பொருள் 25 ரூபாய் மதிப்புள்ள மடிப்பு நாற்காலிகள். தவணைத் திட்டத்தில் பொருள்கள் விற்பனை செய்வதும், விற்பனைக்குப் பிந்தைய சேவையும் வசந்த அன்ட் கோவை மக்கள் விரும்பி வரக்கூடிய நிறுவனமாக மாற்றியது.

    புன்னகை மன்னர் வசந்தகுமார்

    புன்னகை மன்னர் வசந்தகுமார்

    வசந்தகுமார் பயணம் வேகமெடுத்தது 1985ஆம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிகள் விற்பனை ஆரம்பித்த பின்னர்தான். தனது வழக்கமான விற்பனையைத் தவிர, நிறுவனங்களுக்கான விற்பனையையும் அவர் தேர்ந்தெடுத்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தை அணுகி தொலைக்காட்சி பெட்டிகளுக்கு ஆர்டர் கேட்டார். ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டாலும் அவரது அணுகுமுறையால் ஆர்டர் கிடைத்தது. சிரித்த முகமும் பேச்சும் புன்னகை மன்னர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

    வசந்த் அன் கோ வாடிக்கையாளர்கள்

    வசந்த் அன் கோ வாடிக்கையாளர்கள்

    தமிழகத்தில் ஷோரூம் தொடங்கிய வசந்தகுமார் தனது நிறுவனத்தை புதுச்சேரி, கேரளா என விரிவுபடுத்தினார். இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் 86 ஷோரூம்களை 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க இந்நிறுவனம் 100 ஹெல்ப்லைன் எண்களைக் கொண்டுள்ளது.

    வசந்த அன் கோ காலம்

    வசந்த அன் கோ காலம்

    பிளாக் அன் ஒயிட் டிவி விற்பனையில் தொடங்கி எல்இடி டிவி, 4 கே, 8 கே டிவி வரை விற்பனை செய்து அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை வசந்த் அன் கோ காலம் என நாற்பது ஆண்டுகாலம் வரை வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் வசந்தகுமார்.

    பாசக்கார அரசியல் தலைவர் வசந்தகுமார்

    பாசக்கார அரசியல் தலைவர் வசந்தகுமார்

    விளம்பரத்தில் கோட் சூட் அணிந்து காட்சி அளித்தாலும் எப்போதுமே வெள்ளை நிற உடையணிந்து, காங்கிரஸ் சால்வை அணிந்து வலம் வருவார் வசந்தகுமார். எதற்காகவும் கோபப்பட்டு பார்த்ததில்லை. எதையும் ஒரு புன்னகையால் சமாளித்து விடுவார். தனது ஊழியர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது தொகுதி மக்களுடன் பாசமான உறவை கொண்டிருப்பவர். அவர் தனது சுயசரிதையை வெற்றி படிகட்டு என்று எழுதியுள்ளார். அவரது வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+