தவெகவை பார்த்தால் மட்டும்.. சிரிச்சிகிட்டு போறீங்க.. கட்சி சீனியர்களை விட்டு விளாசிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கடுமையாக எச்சரித்துப் பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்துள்ள நிலையில், ஆளும் தவெக அமைச்சர்களுடனும் முக்கிய நிர்வாகிகளுடனும் சில திமுக மூத்த புள்ளிகள் காட்டி வரும் இணக்கமும், சொந்தக் கட்சித் தொண்டர்களை நடத்தும் விதமும் தலைமைக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதை ஸ்டாலினின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

Stalin

எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம்

செயற்குழுவில் பேசிய மு.க. ஸ்டாலின், என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை கோட்பாட்டில், உழைப்பில் உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்... எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில் அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நேரடியாகவே சாடினார்.

களத்தில் உழைக்கும் எளிய உடன்பிறப்புகளையும், புதிய இளைஞர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறும் மாவட்டப் பிரமுகர்கள் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்கள் தானாகவே ஓரங்கட்டப்படுவார்கள் என்பதை அவரது பேச்சு உணர்த்தியது.

சட்டமன்ற இணக்கம்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஆளும் தவெக அரசுக்கு எதிராக வெளிநடப்பு செய்வது, அரசு வாகனங்களை ஏற்க மறுப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றனர். அதே சமயம், சில மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக அமைச்சர்களுடன் சட்டசபையிலும் வெளியிலும் அளவுக்கு மீறிய நட்புறவோடு பழகி வருவதாக தலைமைக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன.

களத்தில் தொண்டர்கள் மாற்றுக் கட்சியினரின் அத்துமீறல்களை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், மாவட்டத் தலைமையும் சீனியர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு கைகோர்த்துக்கொண்டு, சொந்தக் கட்சித் தொண்டர்களை உதாசீனப்படுத்துவது அமைப்பின் அடித்தளத்தையே பலவீனப்படுத்திவிடும் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிரடி சீரமைப்பும் வயது வரம்பும்

இத்தகைய நிலையை உடைப்பதற்காகவே, தங்கம்தென்னரசு தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 77-ஆக இருந்த திமுக மாவட்டங்கள் 110-ஆகப் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட உள்ளது.

மேலும், மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது உச்சவரம்பு மற்றும் 2 முறை மட்டுமே பதவி வகிக்கும் கட்டுப்பாடு, நகரச் செயலாளர் பதவி ரத்து போன்ற 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரு மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது.. புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டத் தவறினால் எந்த இயக்கமும் நிலைக்காது எனக் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை சுயபரிசோதனை செய்து, தொண்டர்களை மையப்படுத்தி இயங்கத் தவறினால் கடும் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+