நயினார் நாகேந்திரன் கக்கிய விஷ(ம)ம்! "தலைவர் பதவில இருந்து தூக்கிடுவேன்!" திருச்சியில் அமித்ஷா டோஸ்?
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருச்சி வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, நயினார் நாகேந்திரனை கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசியல் நாகரீகம் என்பது அனைத்து அரசியல்வாதிகளும் கடைபிடித்து வருகிறார்கள். என்னதான் தேர்தல் களத்தில் எலியும் பூனையுமாக இருந்தாலும் ஒருவர் வீட்டில் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு நாகரீகத்தை கடைப்பிடிப்பதுதான் வழக்கம்.

அது போல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கட்சி மாச்சரியமின்றி நேரில் போய் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறது. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் அரசியல்வாதிகளுக்கும் பொது வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டு இருக்கும்.
பொது வாழ்க்கையில் அந்த நபர் செய்யும் தவறுகளை எப்படி வேண்டுமானாலும் நாகரீகமாக விமர்சிக்கலாம். ஆனால் இதுவரை எந்த தலைமைப் பண்பில் இருப்போரும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியதில்லை.
ஆனால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் விஜய்
சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள திடலில் நடந்தது. அப்போது பேசிய விஜய், அண்ணா தொடங்கிய கட்சியை ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.
ஆனால் நாம்தான் சுயமாக உருவாக்கியுள்ளோம். இதுல நமக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கிறார்கள். இவர்கள் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு ஒரு சதவீதம் வாக்குகளை வாங்க சொல்லுங்கள் பார்க்கலாம் என விஜய் சவால் விடுத்திருந்தார்.
பாவம் விஜய்
இந்த கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும்" என சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
குவியும் கண்டனம்
இதற்கு திமுக பெண் எம்பிக்கள் கனிமொழி சோமு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அது போல் பாஜக மகளிரணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் நயினார் பேசியது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்திருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
திமுகவில் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அந்த கட்சியின் பேச்சாளர் (பேச்சாளராக இருந்தாலும் பெண் குறித்தும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறாக பேசுவது தவறு என்பதை மறுப்பதற்கில்லை). ஆனால் தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் இது போல் பேசியதுதா் இந்த கண்டனங்கள் குவிவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
தேர்தல் நெருங்குது
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தாமரை மலராது, பாஜக தமிழகத்தில் கால் ஊன்றாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வரும் நிலையில் அதற்கு முத்தாய்ப்பாக அமையும் வகையில் உள்ளது நயினாரின் மோசமான விமர்சனம்.
நயினார் பேச்சு
நயினார் பேச்சு, டெல்லி பாஜக தலைமை வரை சென்றுவிட்டது போல! காரைக்காலில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வருகை தந்தார்.
திருச்சி ஹோட்டல்
அவர் அன்று இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர் நயினார் நாகேந்திரனை ஹோட்டலுக்கு வரச் சொன்னாராம். அங்கு நயினாருக்கு அமித்ஷா செம டோஸ் விட்டாராம். "த்ரிஷாவை அவதூறாக பேசியதன் மூலம் பாஜகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.
தேர்தல் வேலை
தேர்தல் வேலைகளை செய்யாமல் எதற்காக தேவையற்ற கருத்துகளை பேட்டியில் கூறி கட்சியின் நற்பெயரை கெடுக்கிறீர்கள். இதே நிலை தொடர்ந்தால் பதவியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டு வேறொருவர் அந்த பதவியில் அமர வைக்கப்படுவார்" என அமித்ஷா காட்டமாக விமர்சித்தாராம். இதை முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். ஆனால் நயினாரை அமித்ஷா கடிந்து கொண்டாரா என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று!
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications