அண்ணாமலை கையில் அது என்ன சிவப்பா? ரத்தம்?.. வெளியான "அந்த" போட்டோ.. கொதிக்கும் பாஜக தலைகள்
சென்னை: பாஜகவில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சித்த திமுக நிர்வாகி சைதை சாதிக்கை கண்டித்து நேற்று பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கையில் அடிபட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சைதை சாதிக் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா போன்றோர் கலந்து கொண்ட முக்கியமான மேடையில் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அண்ணாமலையை கடுமையாக கண்டித்து பேசிய அவர் வரம்பு மீறி பாஜகவில் உள்ள நடிகைகளை விமர்சனம் செய்தார்.

சாதிக்
பாஜகவில் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை கடுமையாக தாக்கி சாதிக் பேசினார். சில தகாத வார்த்தைகளை, விமர்சனங்களை சாதிக் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். அதோடு இந்த விமர்சனத்தை அவர் சிரித்தபடியே வைத்தது பெரிய சர்ச்சையானது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

போராட்டம்
இதையடுத்து நடிகை குஷ்புவிடம் கனிமொழி எம்பி இதற்காக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. பாஜக தலைவர் அண்ணாமலை இதை பயன்படுத்தி திமுக மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தார். திமுகவில் உள்ளவர்களுக்கு நாவடக்கம் தேவை. பெண்களை பற்றி, முக்கியமாக அரசியல் உலகில் இருக்கும் பெண்களை பற்றி இப்படி பேசுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விமர்சனம் வைத்தார்.

அண்ணாமலை
சைதை சாதிக் மீது பாஜக மகளிரணி பொதுச் செயலாளர் நித்யா புகார் கொடுத்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர் . இந்த நிலையில் நேற்று சைதை சாதிக்கை கண்டித்து நேற்று பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக மகளிரணியினர் சார்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் திமுகவிற்கு எதிராக கோஷம் எழுப்பி போரட்டம் செய்தனர்.

ரத்தம்
இந்த போராட்டம் அனுமதி வாங்காமல் நடத்தப்பட்டது. இதனால் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் அண்ணாமலையை சென்னை போலீசார் கைது செய்தனர். கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆனால் அண்ணாமலை வரமாட்டேன் என்று கூறி போலீசிடம் மல்லுக்கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அண்ணாமலை முழங்கையில் ரத்தம் வந்ததாக பாஜகவினர் புகார் வைத்துள்ளனர்.

போராட்டம்
இது தொடர்பாக பாஜகவினர் பல புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். அண்ணாமலை கையில் ரத்தக்கறை இருப்பது போன்ற புகைப்படங்களை பாஜகவினர் பகிர்ந்து உள்ளனர். அவர் கையில் சிவப்பு நிறத்தில் கரை இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். அது ரத்தம் என்று பாஜகவினர் பலர் போஸ்ட் செய்து.. இந்த ரத்தத்திற்கு ஒரு நாள் திமுக பதில் சொல்லும் என்று விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications