உலக மகா நடிப்பு!! குஷ்பு விட்ட கண்ணீரெல்லாம் பொய்யா.. லீக்கான வீடியோ.. சீறி வந்த திமுக.. இதை பாருங்க
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. முக்கியமாக திமுகவினர் தற்போது குஷ்புவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து ,மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
கட்சியில் இருந்து நீக்கம்: இந்த நிலையில்தான் இவர் சமீபத்தில் மீண்டும் மேடை ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசினார். ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா கூட்டத்தில்தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். முக்கியமாக பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி அவர் கடுமையாக பேசி இருந்தார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த முறை மொத்தமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். குஷ்பு கண்ணீரோடு புகார் கொடுத்த சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளது.அதோடு குஷ்புவும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
உலக மகா நடிப்பு!!🤷🏻
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) June 20, 2023
கண்ணீருடன் பேட்டி கொடுத்த பின் நடிகை குஷ்பூ அவர்களின் உண்மை முகம்!
உங்களின் இயல்பு இது தான் போல் @khushsundar !! pic.twitter.com/KDUOVWykbz
மோசமான வீடியோ: குஷ்பு கண்ணீரோடு புகார் கொடுத்த சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளதுதான் தற்போது கவனிக்க வேண்டிய விஷயம். அவர் கண்ணீர்விட்டது தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது குஷ்பு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதில், குஷ்பு கண்ணீர் பேட்டி கொடுத்த பின் உடனே சிரித்துக்கொண்டு.. ரியாக்சனை மாற்றிய காட்சிகள் பதிவாகி உள்ளன. கேமரா முன் நிற்கும் வரை சோகமாக கண்ணீர்விட்ட குஷ்பு.. கேமரா அணைக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு உடனே சிரித்து இருக்கிறார். அடுத்து ஆங்கில சேனல்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று சிரித்திக்கொண்டே பேசி உள்ளார்.
And the DMK continues to bark.. nice to know I do make a difference to you. Thank you. Have a good day. 🙏🏻🙏🏻😁😁
— KhushbuSundar (@khushsundar) June 21, 2023
அவர் இப்படி பேசும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இணையத்தில் கசிந்து உள்ளன. திமுகவினர் தற்போது குஷ்புவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், உலக மகா நடிப்பு!!
கண்ணீருடன் பேட்டி கொடுத்த பின் நடிகை குஷ்பூ அவர்களின் உண்மை முகம்! உங்களின் இயல்பு இது தான் போல், என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள குஷ்பு திமுகவினர் இப்படித்தான்.. அவர்கள் மலிவான கிண்டல் செய்ய கூடிய அரசியல்வாதிகள். அவர்களை கண்டுகொள்ள மாட்டேன் என்றுள்ளார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications