என்கிட்ட கேட்காம.. அறிவாலயம் போகாதீங்க.. கோபப்பட்ட ராகுல்.. கடைசியில் வேண்டா வெறுப்பாக சம்மதம்?
சென்னை: ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள் கேட்டு திமுக கூட்டணிக்குள் முரண்பாடுகளை உருவாக்கிய காங்கிரசின் ஐவர் குழுவை தடுத்து, திமுகவிடம் பேச்சுவார்த்தையை நடத்தும் பொறுப்பை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பா. சிதம்பரத்திடம் ஒப்படைத்தார் சோனியா காந்தி. திமுகவிடம் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது போனால், கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்கிற முடிவில் இருந்தார் ராகுல். அதற்கேற்ப அவரைச் சுற்றியிருந்தவர்களும் தூபம் போட்டபடி இருந்தனர்.
இதைத் தெரிந்து கொண்ட சோனியா, "திமுகவுடனான கூட்டணி நீடிக்க வேண்டும். அதற்கான முடிவுகளை மட்டுமே எடுங்கள் " என்று ஆரம்பத்திலேயே ராகுலுக்கு அட்வைஸ் செய்திருந்தார். ஆனாலும் ராகுல் டீம் அமைதியாகவில்லை. திமுக உறவில் சிக்கல்களை அதிகரித்தப்படியே இருந்தது.

ராகுல் திமுக மோதல்
இந்த சிக்கல்கள் அதிகரிப்பதை ரசிக்காத திமுக தலைவர் ஸ்டாலின், "கூட்டணியில் இருந்து கொண்டு சிக்கலை உருவாக்குவது ஆரோக்கியமானதில்லை. எங்கள் நிலையை சோனியாவிடம் ஏற்கனவே சொல்லி விட்டோம். இனியும் இப்பிரச்னையை இழுத்துக் கொண்டேயிருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. விருப்பம் இல்லையெனில் கூட்டணியிலிருந்து வெளியேறலாம். நட்புடனே பிரிந்து விடுவோம் " என்று ப.சி.யிடம் வருத்தப்பட்டார் ஸ்டாலின். இதனை சோனியாவிடம் ப.சி.தெரிவித்த நிலையில் தான், அவரையே ஸ்டாலினிடம் பேசுமாறு சொன்னார் சோனியா.
இதனையடுத்து, ஸ்டாலினை சந்தித்து விவாதித்தார் ப.சிதம்பரம். அந்த சந்திப்பை அடுத்து, 28+1 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு கூட்டணியை உறுதிப் படுத்திக்கொண்டார் ஸ்டாலின்.
சோனியா முடிவு
இறுதிக் கட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, " ஸ்டாலின் வீட்டில் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த சிதம்பரம், 41+2 என காங்கிரஸ் எதிர்பார்ப்பதை தெரிவித்தார். ஆனால், கூட்டணியை விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கும் சூழலை விவரித்த ஸ்டாலின், எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். 25 என்பதை 26 ஆக உயர்த்தி தருகிறோம். ராஜ்யசபா 2 எனில், இப்போதைக்கு முடியாது. 2 தரக்கூடிய சூழல் இல்லை.
1 தான் தரமுடியும் என கறாராகத் தெரிவித்தார் ஸ்டாலின். இதனை கார்கே மூலமாக சோனியாவுக்கு ப.சி. தெரியப்படுத்திய பிறகு டெல்லியிலிருந்து வரும் தகவல்களுக்காக காத்திருந்தனர். அப்போது, கடந்த கால அரசியல், தேர்தல் வெற்றி, கிறிஸ் சோடங்கர் யார்? கே.சி.வி.யின் அரசியல் என்ன? என்பது குறித்தெல்லாம் ஸ்டாலினும் ப.சி.யும் பகிர்ந்து கொண்டனர்.
ராஜ்யசபா 1 சீட்டுக்கு ஒ.கே.!
இப்படியே நிமிடங்க நகர்ந்த நிலையில், கார்கேவிடமிருந்து ப.சி.க்கு ஃபோன். அதில், ராஜ்யசபா 1 சீட்டுக்கு ஒ.கே.! சட்டசபை சீட்டை உயர்த்துமாறு மேடம் கேட்கிறாங்க என சொல்லியுள்ளார். இதனை ஸ்டாலினிடம் சிதம்பரம் சொல்ல, அவர் யோசிக்க, 26-யை 28 ஆக கொடுங்கள். சோனியாவிற்காக இதை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார் சிதம்பரம். அதான் பிறகு சில கணக்குகளை கூட்டி கழித்துப் போட்டுப்பார்த்த ஸ்டாலின், 28-க்கு ஓ.கே.சொன்னார். இதனை மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டு ஸ்டாலினிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் சிதம்பரம்.
அதேசமயம், கார்கே வழியாக சோனியாவுக்கும் ராகுலுக்கும் 28+1 என்பதை தெரிவிக்கப்பட்ட நிலையில், சோனியாவுக்கு திருப்தி. ஆனால், இதனை ராகுல் ஏற்காமல் ராஜ்யசபா 1 எனில் 28-யை 30 ஆக உயர்த்திக் கொடுக்கச் சொல்லுங்கள் என முரண்டு பிடித்தார்.
ஸ்டாலின் தந்திருப்பது கௌரவமான எண்ணிக்கை
இதனையறிந்த சிதம்பரம், ஸ்டாலினிடம் கலந்து பேசாமலேயே, ' இதற்கு மேலே திமுகவிடம் வலியுறுத்த முடியாது. வலியுறுத்தினாலும் ஸ்டாலின் ஒப்புக்கொள்ள மாட்டார். வேண்டுமானால் நீங்களே பேசிக் கொள்ளுங்கள். இப்போது ஸ்டாலின் தந்திருப்பது கௌரவமான எண்ணிக்கை தான். இதை ஏற்காமல் மீண்டும் மன வருத்தம் உருவானால் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வாய்ப்பில்லை. திமுகவுடன் கூட்டணி முறிந்தால், தமிழகத்தில் காங்கிரசும் பிளவு படலாம். அதைத்தடுக்க முடியாது. யோசித்துக் கொள்ளுங்கள் என கார்கேவுக்கு தகவல் பாஸ் செய்தார் சிதம்பரம்.
அறிவாலயத்திற்கு சென்றனர். ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கிடையே, கோவாவில் இருந்த கிறிஸ் சோடாங்கரிடம், 'நீங்கள் சென்னைக்கு கிளம்பிப் போங்கள். என்னிடமிருந்து உத்தரவு வராமல் அறிவாலயம் போக வேண்டாம்' என்று எச்சரிக்கை செய்திருந்தார் ராகுல் . அதான் பேரில் 4-தேதி சென்னைக்கு வந்தார் கிறிஸ். செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் கிறிஸ்சை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றனர்.
அதேசமயம், சோனியாவிடம் பேசிய கார்கே, சிதம்பரம் சொன்ன அனைத்து விபரங்களையும் விவரிக்க, டென்ஷனாகி விட்டார் சோனியா.உடனே ராகுலை தொடர்பு கொண்டு மிகவும் கடிந்து கொண்டார் சோனியா காந்தி. அதன் பிறகு, கே.சி. வேணுகோபாலிடம் விவாதித்து விட்டு வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் ராகுல். இதனை அடுத்து கிறிஸ் சோடங்கருக்கு ராகுலிடமிருந்து உத்தரவு வந்தது.
அறிவாலயத்திற்கு சென்றனர். ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது " என்று நடந்தவைகளை விவரித்தனர் சிதம்பரத்திற்கும் செல்வ பெருந்தகைக்கும் நெருக்கமான காங்கிரஸ் சீனியர்கள். சோனியாவும் சிதம்பரமும் தலையிடாமல் இருந்திருந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவு முறிந்து போயிருக்கும் என்பதே கதர்சட்டைகளின் கருத்தாக இருக்கிறது.
-
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications