"திருமா..ண்ணே".. சான்ஸே இல்ல, ஏமாந்து போவீங்க.. இங்க பேசிட்டே அங்க "தந்திர" பாமக.. திருமாவளவன் ஆவேசம்
திமுக - விசிக கூட்டணி குறித்து மீண்டும் தெளிவுபடுத்தி பேசியதுடன், பாமகவையும் விமர்சித்துள்ளார் திருமாவளவன்
சென்னை: திமுகவுடன் பேசிக்கொண்டே, அதிமுகவின் பேரத்தை உயர்த்துவதும், அதிமுகவுடன் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும் பாமகவின் தேர்தல் தந்திரம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், சென்னை திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது" என்றும் திருமாவளவன் கூட்டணி குறித்து மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
பாஜகவை தொடர்ந்து சாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன்.. மேலும், பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்து வருகிறார்.
ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என்று கூறிவருகிறார்.

கட்சி சிதறல்கள்
அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.. காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைத்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள் என்றும் திருமாவளவன் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்.

தடா பெரியசாமி
மற்றொருபக்கம், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பாஜக செயல்படுவதாகவும், அண்ணாமலை, சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டி சென்னையில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்.. இதையடுத்து, திருமாவளவனை கடுமையாக சாடினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜகவுக்கும், விசிகவுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது... விசிகவுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது.. விசிகவினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை தலைவரிடம் மோதுங்கள். அவரை எதிர்க்கிறேன் என்று அவர் வீட்டில் போய் அவரது காரை அடிக்க தெரியாமல் அடிப்பது, கண்ணாடியை உடைக்க தெரியாமல் உடைப்பது என விசிகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருமாண்ணே
பட்டியலின சகோதர, சகோதரிகள் பாஜக பக்கம் முழுமையாக வந்துவிட்டார்கள்... தடா பெரியசாமி, வி.பி.துரைசாமி போன்றவர்கள் பாஜகவில் மிகப்பெரிய தலைவர்களாக இருக்கிறார்கள். பாஜக போல் உங்கள் கட்சியில் சமூகநீதி அடிப்படையில் பதவி கொடுத்திருக்கிறோம் என்று ஒருவரைச் சொல்லுங்கள் பார்ப்போம். திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை... அதனால் ஸ்டாலின் அவர்களிடம், 'கூட்டணியைவிட்டு போய்விடுவேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி போவதாக இருந்தால் அண்ணா நீங்க தயவுசெய்து வாங்க... நானே மாலையைப் போட்டு வெளியே வாங்கனு கூப்பிடுகிறேன்.

பிளாஸ்டிக் சேர்
அதுக்காக பாஜகவை திட்டிவிட்டு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதாக ஏன் டிராமா போடுகிறீர்கள். நானும் ஒரு மாதமாக பார்த்து கொண்டிருக்கிறேன்... திருமாவளவன் அண்ணா கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால், அவர் போகிற கூட்டணியில் இவர்கள் எல்லாம் இருக்கக் கூடாதாம். யார் இருக்கக் கூடாது, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை ஆகிய பழங்கள் இல்லை என்றால் தான் வருவாராம். உங்களுக்குத்தான் இருக்க மரியாதை இல்லை. பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக திமுகவினர் நடத்துகிறார்கள் என்றால், திருமாவளவன் வெளியே வர வேண்டாமா? பாஜகவை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு, அதை வைத்து வெளியே வருவதற்கு எங்களை ஏன் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

ஓட்டை விரிசல்கள்
அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருமாவளவன் மீண்டும் அண்ணாமலைக்கு பதிலடி தந்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்... திமுகவிற்கும், விசிகவிற்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் வாய்ப்பே கிடையாது.. அதுபோன்ற எண்ணங்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏமாந்து தான் போவார்கள்.

பாஜக ப்ளான்
திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது. பாமகவின் கலாச்சாரம் என்பது ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, தேர்தல் நெருங்கி வரும் ஓரிரு ஆண்டுகளில் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்களோ அந்த கூட்டணியில் இருந்து மெல்ல விலகி, வேறொரு நிலைப்பாட்டை எடுப்பார்கள்... கட்சியை வலுப்படுத்துவதற்காகவே இதுபோன்ற சூழ்ச்சிகளையும், உத்திகளையும் பாமக கையாள்கிறது...

சீண்டிய திருமா
திமுகவுடன் பேசிக்கொண்டே, அதிமுகவின் பேரத்தை உயர்த்துவதும், அதிமுகவுடன் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும் பாமகவின் தேர்தல் தந்திரம்... ஆளும் கட்சி கூட்டணி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டதன் வெளிப்பாடே இந்த வெற்றியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருகிறோம்" என்றார்.. ஒருபக்கம் பாஜகவுக்கு பதிலடி தந்துள்ள நிலையில், மறுபுறம் விசிக + திமுக கூட்டணி குறித்து அழுத்தமாக கூறி, பாமகவையும் சீண்டிஉள்ளார் திருமாவளவன்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications