"ரெடியா இருங்க".. இப்ப ஓகே, வாக்குறுதியை மீறினால் மீண்டும் பஸ் ஸ்டிரைக்.. சிஐடியூ அதிரடி.. என்னாச்சு
சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாட்டோம் என்று பேச்சுவார்த்தையில் உறுதி தந்துள்ளார்கள்.. இந்த வாக்குறுதியை மீறினால் மறுபடியும் போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்தும் வருகிறார்கள்.
ஆனால், ஒவ்வொரு பணிமனையிலும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டி வருகிறார்கள்.. இந்த பஸ்களுக்கு "ஸ்பேர் பார்ட்ஸ்" இல்லை என்றும் சொல்லப்படுகிறது..

மின்சார பேருந்து: இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நோக்கில், உலக வங்கி நிதி உதவியுடன் இந்த வருடம் 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.. அத்துடன், புதிதாக வாங்கப்படும் பேருந்துகளை அரசு மற்றும் தனியார் பங்களிடப்புடன், டிரைவர், கண்டக்டர்களை நடத்துநர்களை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் போக்குவரத்து துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்கு திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன..
இதனிடையே, 12 போக்குவரத்து பணிமனைகளில் காண்டிராக்ட் அடிப்படையில், 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை மாநகரில் தகவல்கள் பரவின.. இதனால், மாநகர பஸ் டிரைவர்கள், இயக்கி கொண்டிருந்த பஸ்களை எல்லாம் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பயணிகளையும் கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் அதிரடியாக குதித்தனர். இந்த திடீர் போராட்டத்தினால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பஸ்கள் இயக்கம்: இதற்கு பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும், போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.. இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களும் பஸ்களை இயக்க தொடங்கினர்..
இதனிடையே, பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர். அந்தவகையில், தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியையும் இன்று சந்தித்து பேசினார்... அவருடன் தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்தித்தனர். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேசினர்.

பேச்சுவார்த்தை: ஏற்கனவே, போக்குவரத்துதுறை + தொழிலாளர் நலத்துறை + சிஐடியூ தொழிற்சங்கம் தரப்பில் 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று 3ம்கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்தது.. இதற்கு பிறகு, சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது, "பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாட்டோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.. இருந்தாலும் எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை வரவில்லை..
மீண்டும் ஸ்டிரைக்: இந்த வாக்குறுதியை மீறினால் மறுபடியும் போராட்டம் நடத்துவோம்.. வரும் 9-ம் தேதி மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்... 10 வருடங்களாகவே காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை.. அதனால், விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications