இதெல்லாம் தெண்ட செலவு.. வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி? சீமான் டென்சன்
சென்னை: சந்திர மண்டலத்தை ஆய்வு செய்வது எல்லாம் தெண்ட செலவு என்றும் என் வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நிலவில் போய் ஆக்சிஜன் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.. இங்கே இருக்கிறதா.. அங்கே போய் நீரை தேடுகிறீர்கள். இங்கே இருக்கும் நீர் என்ன ஆனது.. பூமியை தவிர எந்த கோள்களிலும் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த கோளில் மட்டும் தான் இருக்கிறது. சூரியனின் குழந்தைகள் தான் இவ்வளவு கோள்களும்.

அதில் பூமியில் மட்டும் தான் நீர் உள்ளது. இயற்கையின் விதியை பாருங்க... ஹைட்ரஜன் ஒரு விழுக்காடும் ஆக்சிஜன் 2 விழுக்காடும் இருந்தால் அது தண்ணீர் ஆகியிருக்காது. ஹைட்ரஜன் 2 விழுக்காடு ஆக்சிஜன் ஒரு விழுக்காடு என இருப்பதால் அது நீராகியுள்ளது. அந்த நீருக்குள்தான் உயிரினம் தோன்றியுள்ளது. அமீபாவில் இருந்து இவ்வளவு பெரிய உயிரினங்கள் வந்து இருக்கு...
சந்திரயான் ராக்கெட் பறக்கும் போது.. இங்கே சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்குகிறார்கள்.. என்ன உங்கள் விஞ்ஞானம்... எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்கிறீர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் தரையில் நோயாளி படுத்து இருக்கிறான். அவருக்கு குளுகோஸ் வைக்க ஸ்டேண்ட் கூட இல்லை. கையில் ஒரு அம்மா பிடித்துக் கொண்டு நிற்பதை பார்த்தீர்களா இல்லையா... ஆம்புலன்ஸ் வசதி இல்லை.. யாருக்கு ஷோ காட்டுறீங்க..

இந்தியா போய் நிலவில் குடியேறிடுமா? அமெரிக்கா ரஷ்யா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? அவர்களுக்கு தெரியுது இது வெட்டி செலவு என்று... நீங்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். சரியாக தேர்தல் வரும் போது மட்டும் சந்திரயான் இறங்குதே எப்படி.. சந்திரயான் இறங்காவிட்டால் நீங்கள் மொத்தமாக இறங்கி விடுவீர்கள். 3 லட்சம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலவுக்கு சந்திரயானை அனுப்ப முடிகிறது.
ஆனால் 3 ஆயிரம் கி.மீட்டரில் இருக்கும் மணிப்பூருக்கு செல்ல முடியவில்லை. ஓகி புயலின் போது வர முடியவில்லை. குரங்கனியில் தீ பிடித்து எரியும் போது வர முடியவில்லை. சந்திர மண்டலத்திற்கு நீங்கள் சந்திரயானை விடுறீங்க... நீங்கள் வேண்டும் என்றால் 10 வருடம் கழித்து பாருங்கள் என்ன நடந்தது என்று.. தெண்ட செலவு... என் வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி... வெறுப்பு வருமா வராதா.. இவ்வாறு சீமான் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications