சென்னையில் போலீஸை பாடாய்படுத்திய நபர்.. நான்ஸ்டாப்பாக அந்த வார்த்தை.. காதுகள் பாவமில்லையா?
சென்னை: சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா ஜங்சன் அருகே போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து போலீசாரிடம் மிகவும் ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போலீசாரை பாடாய்படுத்தி அந்த நபரை, நண்பரை வரவழைத்து ஒருவழியாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா ஜங்சன் அருகே போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சிறிய அளவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அவர் சுயநினைவில் இல்லை என்பதை கண்டனர். அவரிடம் பேசி போது, போலீசார் குறித்து மிகவும் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.

ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கவில்லை.. போதையில் இருந்த அவரிடம் எதற்காக இப்படி குடித்துவிட்டு இருக்கீங்க என்று போலீசார் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் மிக அசிங்கமான வார்த்தைகளை பேசிய படி, அரசு விற்கிறது.. நான் குடிக்கிறேன் என்று விதாண்டவாதமாக பேசினார். அதேநேரம் மது போதையில் உளறிய படி இருந்த அந்த நபரை போலீசார் அங்கிருந்து கிளம்பி போக சொன்னார்கள்.
கிருஷ்ணகிரி டாஸ்மாக் 'வீரன்'.. ரூ.180 படுத்தும் பாடு.. நடுரோட்டில் லாரியை நிறுத்தி முரட்டு சம்பவம்
ஆனால் அவர் போகாமல் சாலையில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசியபடி இருந்தார். ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் அளித்து வரச்சொன்னார்கள். அவர்கள் நேரில் வந்த விசாரித்த அங்கிருந்து அவரை அனுப்பி வைக்க முயற்சித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போலீசாரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த ஆட்டோ ஓட்டுநரை, ஒருவழியாக அவரது நண்பரை நேரில் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர், 'இவன் தான் என்ன அடிச்சி என் மேல கேஸ் போட்டான் மச்சான்' என்று போதையில் உளறியபடி இருந்தார். சுமார் அரை மணி நேரமாக நடுரோட்டில் அமர்ந்து சென்னையில் போலீசாரை பாடாய் படுத்திய நபரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய நபரிடம் போதை தெளிந்த பின்னர், போலீசார் கண்டிப்பாக நேரில் அழைத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் மது போதையில் ஒருவர், நடுரோட்டில் லாரியை மறித்து அதன் மீது சாய்ந்து தூங்கினார். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்தபடி, அசால்டாக சென்றார். மதுபோதையில் அங்கும் இங்கும் உலாவந்த அவர், வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது. இதை பார்த்த சிலர், அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியா சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்












Click it and Unblock the Notifications