கிருஷ்ணகிரி டாஸ்மாக் 'வீரன்'.. ரூ.180 படுத்தும் பாடு.. நடுரோட்டில் லாரியை நிறுத்தி முரட்டு சம்பவம்
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் திறக்கும் முன்பே எங்கோ சென்று காலையிலேயே குடித்த குடிமகன் ஒருவர், தமிழக -கர்நாடகா எல்லையில் செய்த அலப்பறை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதையில் இருந்த குடிமகன் நடுரோட்டில் லாரியை நிறுத்தி அதன் மீது தூங்கி இருக்கிறார். இந்த வீடியோ பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் கசப்பான ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். தினசரி உழைக்கும் கூலித்தொழிலாளிகள் பலர் குடிபோதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் போதையில் கண்ட இடத்தில் உறங்குகிறார்கள். சிலர் போதையில் மட்டையாகி நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இன்னும் சிலர் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தங்களை அறியாமல் வாயில் வந்ததை பிதற்றுகிறார்கள். மிகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசிவிட்டு, சண்டையும் போடுகிறார்கள்.

மது ஒரு மனிதனின் உடம்பிற்குள் சென்றால், அவன் எவ்வளவு நல்லவன், நல்ல பெயர் எடுத்தவன் என்றாலும், நொடியில் கெட்டவனாகவும், கேவலமானவனாகவும் மற்றவர்களை நினைக்க வைத்துவிடும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சொல்வதற்கு காரணம்.. அவர்கள் தங்கள் நிலையை மறந்துவிடுவார்கள் என்பது தான் காரணம். சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத நிலைக்கு குடிகாரர்கள் எளிதாக போய்விடுவார்கள்..அதுவே முக்கிய காரணம்.
முன்பெல்லாம் குடிக்க போனால் அவமானமாக பார்க்கப்பட்டது. குடித்துவிட்டு வந்தால் அவர்களை சமூகம் கேவலமாக பார்க்கும். இன்று அப்படி அல்ல.. மதுக்கடைகள் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. எத்தனை மதுபாட்டில்கள் வாங்கியும் ஒருவர் குடிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. குடிகாரர்களை பொறுத்தவரை, ஒரு பாட்டில் குடித்தவர், இன்னொரு பாட்டில் குடிக்காமல் செல்வது என்பது மிகவும் அபூர்வம்.
கொத்தனார் வேலைக்கு செல்பவர், ஆட்டோ ஓட்டுபவர், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், தூய்மை பணியாளர்கள், எலகட்ரீசியன், பிளம்பர், சமையல் மாஸ்டர் மற்றும் கடைகளில் வேலை செய்வோர் என அன்றாடம் கூலி வேலை செய்வோர் மதுவிற்கு அடிமையாகி அன்றாடம் சாம்பாதிக்கும் பணத்தில் பாதியை மதுக்கடையில் கொடுத்துவிடுகிறார்கள் . ஒருவர் 600 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், 300 ரூபாயை மதுவிற்கே செல்வு செய்கிறார். இப்படி மதுவால் அவர்கள் குடும்பமே வறுமையில் வாடுகிறது.. குடிப்பழக்கத்தில் இருந்து இவர்களை மீட்க வழி தெரியாமல் அவர்களின் குடும்பம் தினமும் கண்ணீர் விடுகிறது..
இதுஒருபுறம் எனில் மது அருந்திவிட்டு அவர்கள் செய்யும் அலப்பறையால், அவர்களுக்கு மட்டுமல்ல.. அவர்கள் குடும்பத்திற்கே கெட்ட பெயராகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் காலையில் குடித்த குடிமகன், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், நடுரோட்டில் லாரியை நிறுத்தி அதன் மீது சாய்ந்தவாரே தூங்கினார்.
பின்னர் சற்றும் பயமில்லாமல் பெங்களூர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் போதே குறுக்கே பாய்ந்து இங்கும் அங்கும் சென்று அலப்பறை செய்தார். சாலையில் போதையில் தள்ளாடியபடி அவர் நடந்து சென்றதை சிலர் படம் பிடித்தனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications