"கல்யாணம் முதல் குழந்தை வரை.." அமலா பால் வாழ்க்கையில் கடந்த ஓராண்டில் நடந்த மேஜிக்.. அடடே செம
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பாலுக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இலை எனப் பெயரிட்டுள்ளனர். கல்யாணம் முதல் குழந்தை பிறப்பு வரை அமலா பால் அனைத்தையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தே வந்துள்ளார். கடந்த ஓராண்டில் அமலா பால் கடந்து வந்ததை நாம் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்ற போதிலும் அடுத்து வந்த மைனா திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்து, அனைவரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அடுத்தாண்டு ரிலீஸான தெய்வ திருமகள் படத்தில் இவர் சிறிய ரோலில் மட்டுமே நடித்திருந்தாலும் கவனிக்க வைத்தார். தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களிலும் அமலா பால் நடித்திருந்தார்.
அமலா பால்: 2013இல் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்த அவர், 2014ல் மெகா ஹிட் அடித்த வேலையில்லா பட்டதாரி படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களிலும் அவர் நடித்து வந்தார். குறிப்பாக 2019இல் வெளியான ஆடை படத்தில் கதைக்குத் தேவை என்பதால் ஆடையே அணியாமல் நடித்திருந்தார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் மலையாள படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இவர் ஜெகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர். கல்யாணம் முதல் குழந்தை பிறப்பு வரை அமலா பால் அனைத்தையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தே வந்துள்ளார். கடந்த ஓராண்டில் அமலா பால் கடந்து வந்ததை நாம் பார்க்கலாம்.
கல்யாணத்திற்கு ஓகே: ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் காதலித்து வந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக அவர்கள் இருவருமே எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையே அமலா பால் கடந்தாண்டு தனது பிறந்த நாளன்று.. அதாவது அக். 26ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அமலா பாலை திருமணம் செய்து கொள்ள சர்ப்ரைஸாக ஜெகத் தேசாய் ப்ரபோஸ் செய்வது போலவும் அதற்கு அமலா பால் ஓகே சொல்வது போலவும் இருந்தது.
இதையடுத்து கடந்தாண்டு நவ. மாதம் அமலா பால்- ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அதன் இரண்டு மாதங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை அவர் பகிர்ந்து வந்தார். குறிப்பாக அவர் டிச. இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த படத்தைப் பகிர்ந்தார். அப்போதே சிலர் அமலா பால் கர்ப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். இதையடுத்து ஜன. மாதம் தான் அவர் கர்ப்பமாக இருப்பதை முதலில் அறிவித்தார்.
கொண்டாட்டம்: அமலா பால்- ஜெகத் தேசாய் ஜோடி இந்தாண்டு பொங்கலை ஒன்றாகவே கொண்டாடினர். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ இன்ஸ்டாவில் ஹார்ட்களை அள்ளியது. அதே மாதம் அவர் யோகாசனம் செய்யும் வீடியோவும் பகிர்ந்திருந்தார். கர்ப்ப காலத்தில் யோகா தனக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் மற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் யோகா செய்யலாமா என்பதை மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் எச்சரிக்கவும் தவறவில்லை.
இந்தாண்டு காதலர் தினத்தன்றும் இவர்கள் போட்டோவை பகிர்ந்தனர். காதலர் தினத்தை இந்த ஜோடி கொண்டாடிய இடம் தான் பலருக்கும் சர்ப்ரைஸ். ஆமாம், இவர்கள் காதலர் தினத்தன்று கோவை இஷா மையத்தில் அமைதியாக யோகா செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் தான் ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமலா பால், தனது காதல் கணவனுடன் நடனமாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.
குழந்தை: தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா நடந்தது. அதன் பிறகும் அமலா பால் தொடர்ச்சியாக சில போட்டோக்களை பகிர்ந்தே வந்தார். தனது கணவர் கர்ப்ப காலத்தில் எப்படி தனக்கு உதவுகிறார் என்பதையும் பல போஸ்ட்களில் குறிப்பிடத் தவறவில்லை. இந்தச் சூழலில் தான் ஜெகத் தேசாய்- அமலா பால் ஜோடிக்குக் கடந்த ஜூன் 11இல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமலா பால் குழந்தையுடன் முதல்முறை வீடு திரும்பும் வீடியோவையும் இப்போது அவரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications