கொரோனாவில் குபீர் யோசனை.. என்னா ஒரு மூளை.. ஆளுங்களையே காய்னாக்கி.. சூப்பர் கேரம்.. சுப்ரீம் ஐடியா!
சென்னை: பாரம்பரிய விளையாட்டான கேரம்போர்டின் புதிய வெர்ஷனை ஒரு சிலர் லாக்டவுனில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். அதாவது அந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் காயின்கள், ஸ்டிரைக்கருக்கு பதிலாக ஆட்களை கொண்டு விளையாடுவதுதான் ஸ்பெஷாலிட்டியே.
Recommended Video
கேரம்போர்டு... இந்த விளையாட்டு இந்தியாவில் பிறந்த ஒரு விளையாட்டாகும். இது முதலாம் உலக போருக்கு பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. இந்த விளையாட்டை 2 அல்லது 4 பேர் (செட் சேர்த்து) விளையாடலாம்.
சதுர வடிவத்திலாலான பிளைவுட்டை கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவர். இது 29 இன்ச்கள் வரை இருக்கும். தற்போது பிளாஸ்டிக்களில் சிறுவர்கள் விளையாடும் போர்டுகளும் வந்துள்ளன.

ஸ்டிரைக்கர்
இந்த கேரம் போர்டில் மொத்தம் 19 காயின்கள் இருக்கும். 3 நிறங்களில் அவை இருக்கும். வெள்ளை, கருப்பு, சிகப்பு நிறம். இந்த வெள்ளையும் கருப்பும் விளையாடுவோர் எந்த நிற காயினை முதலில் போடுகிறார்களோ அதை எடுத்துக் கொள்வர். அது போல் சிகப்பு நிறமானது குயின் என அழைக்கப்படுகிறது. இந்த காயின்களை அடிக்க ஒரு ஸ்டிரைக்கரும் இருக்கும்.

4 வட்டம்
சரி இதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என பார்க்கிறீர்களா. அது சரி, தற்போது டிக்டாக்கில் கேரம்போர்டு குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காயின்களுக்கு பதிலாக ஆட்களை கொண்டு விளையாடுகிறார்கள். கேரம்போர்டு போல் சாக்பீசில் வரைந்து கொள்கிறார்கள். 4 மூலைகளிலும் 4 வட்டம் (காயின் விழும் இடம்) போட்டுள்ளனர்.

வட்டத்தில் விழுதல்
நடுவில் 4 பேரை நிற்க வைத்துள்ளனர். எதிரெதிரே ஒருவர் என இருவர் நின்றுக் கொண்டுள்ளனர். ஒருவரை ஸ்டிரைக்கராக பயன்படுத்துகிறார்கள். முதலில் இந்த ஸ்டிரைக்கர் நபரை ஒருவர் பிடித்து 4 பேர் மீது தள்ளுகிறார். அந்த 4 பேரில் ஒருவர் போய் 4 மூலையில் உள்ள வட்டத்தில் விழுகிறார்.

டிக்டாக்
அடுத்தது அந்த ஸ்டிரைக்கரை இன்னொருவர் 3 பேர் மீது தள்ளி விடுகிறார். இப்படியாக இந்த விளையாட்டு விளையடப்படுகிறது. 4 பேரையும் யார் மூலையில் உள்ள வட்டத்தில் தள்ளுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவர். இந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து ஷேர் செய்யப்பட்டது. இது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications