தங்கம், வெள்ளி வாங்கும் சான்ஸை விட்டீங்களா? பரவாயில்லை.. 121% லாபம் தரும் உலோகம் இதுதான்! விடாதீங்க
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் அதிரடியான விலையேறி விட்டது. ஐந்து வருடம் முன்பு வாங்கி போட்டிருந்தால் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு லாபம் கிடைத்திருக்கும். தற்போது "வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமோ" என்று நினைக்கும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு, சந்தை வல்லுநர்கள் ஒரு புதிய வாய்ப்பை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதுதான் பிளாட்டினம் .
இந்த ஆண்டில் வரலாறு காணாத லாபம் தந்த முதலீடு என்றால் அது வெள்ளி தான். வெள்ளியின் அபாரமான வளர்ச்சி உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட 'ஷார்ட் ஸ்குவீஸ்'காரணமாக வெள்ளி மற்றும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக உருவெடுத்திருக்கிறது.ஆனால், இவற்றுக்கு இணையாக பிளாட்டினமும் தற்போது சத்தமே இல்லாமல் விலை ஏறிக்கொண்டே வருகிறது.

பற்றாக்குறையால் பிரகாசமான வாய்ப்பாகும் பிளாட்டினம்
டிசம்பர் 24 புதன்கிழமை அன்று, பிளாட்டினம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் 2,351.05 டாலராக உயர்ந்தது. இந்திய மதிப்பில் இதனை கணக்கிட்டால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 152 ரூபாய் ஆகும். தங்கம் மற்றும் வெள்ளியைப் போலன்றி, பிளாட்டினம் ஒரு விலைமதிப்பற்ற உலோகம் மட்டுமல்லாமல், தொழில்துறை உலோகமாகவும் தனித்துவமான இடத்தை சந்தையில் பிடித்திருக்கிறது.
உலக பிளாட்டினம் முதலீட்டுக் குழு வெளியிட்ட அறிவிப்பில், சந்தையில் பிளாட்டினத்தின் தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் இருப்பது இதன் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கு எல்லாம் பிளாட்டினம் பயன்படுகிறது
வாகனத் துறை: வாகனங்களின் புகைப்போக்கி (Catalytic converters) சாதனங்களில் 39% பயன்படுத்தப்படுகிறது.
ஆபரணங்கள்: நகைகள் செய்து ஆபரணமாக பயன்படுத்துவது 28% ஆகும்
தொழில்துறை: மின்னணு சாதனங்கள் மற்றும் உரங்கள் தயாரிப்பில் 24% பிளாட்டினம் பயன்படுகிறது.
மருத்துவத் துறை: மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பிளாட்டினம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
முதலீட்டாளர்கள் ஏன் பிளாட்டினத்தை விரும்புகிறார்கள் தெரியுமா?
தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தவறியவர்களுக்கு பிளாட்டினம் ஒரு சிறந்த மாற்று வாய்ப்பு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். செப்டம்பர் 2025-ல் பிளாட்டினம் 1,500 டாலர் என்ற இலக்கைத் தாண்டி, தற்போது 2,300 டாலருக்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவில் பிளாட்டினம் விலை எப்படி: இந்தியாவில் சர்வதேசசந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
2025 தொடக்கத்தில்: 10 கிராம் ₹25,160 ஆகு இருந்தது.
டிசம்பர் 19 நிலவரப்படி: 10 கிராம் ₹55,350 ஆக இருந்தது
வளர்ச்சி: இந்த ஒரே ஆண்டில் மட்டும் 121% ஆக உயர்ந்துள்ளது. (இதே காலத்தில் தங்கம் 74%, வெள்ளி 132% வளர்ச்சியைப் பெற்றுள்ளன).
இந்திய முதலீட்டாளர்கள் இதில் எப்படி முதலீடு செய்யலாம்?
பிளாட்டினத்தில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன:
நேரடி முதலீடு: நகைக்கடைகளில் பிளாட்டினம் நகைகள், காசுகள் அல்லது கட்டிகளாக வாங்கலாம். பி.ஜி.ஐ சான்றிதழ் உள்ளதா என்பதைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகம். ஆனால், இதில் செய்கூலி மற்றும் பாதுகாப்பு போன்ற சிரமங்கள் இருக்கின்றன.
நிதி சார்ந்த முதலீடு: இந்தியாவில் பிளாட்டினம் இ.டி.எஃப் கிடையாது. ஆனால், Zerodha, Groww, ICICI Direct போன்ற தளங்கள் மூலம் சர்வதேச சந்தையில் உள்ள பிளாட்டினம் ETF-களில் முதலீடு செய்ய முடியும். இது 'லிபரலைஸ்டு ரெமிட்டன்ஸ் ஸ்கீம்' கீழ் வரும் என்கிறார்கள் முதலீட்டாளர்கள்,
எச்சரிக்கை:
பிளாட்டினம் நல்ல லாபத்தைக் கொடுத்தாலும், கமாடிட்டி சந்தை எப்போதும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளில் பணப்பரிமாற்ற விகித அபாயங்கள் இருக்கிறது. எனவே, முதலீடு செய்யும் முன் சந்தை நிலவரத்தை நன்கு ஆராய்வது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பு: இது ஒரு பொருளாதார நிபுணர்களின் கணிப்பு மற்றும் புள்ளி விவரம் மட்டுமே. இதில் சந்தை அபாயங்களை அறிந்து நீங்களே சுயமாக முடிவெடுங்கள்.. யாரையும் கண் மூடித்தனமாக நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம். செபியின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றுங்கள்.












Click it and Unblock the Notifications