ஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் ஒரே நாளில் பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவமழை பொய்த்து போனது. இதனால் அடுத்தடுத்து மழை இல்லாததால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவி வந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் வறண்டது. மக்களும் தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர். இந்த நிலையில் 196 நாட்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக சென்னையில் மழை பெய்தது.

கொட்டித் தீர்த்த மழை
அதுவும் வண்டியின் சீட்டுகள் நனையும் அளவுக்கே பெய்தது. எனினும் இதை மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

குடிநீர் பிரச்சினை
விடிய விடிய பெய்த மழையால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை சென்னையின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் அளவுக்கு பெய்துள்ளது.

தண்ணீர்
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெய்த மழையால் 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது.

சோழவரம் ஏரி
தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,245 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 347 கனஅடி நீரும், புழல் ஏரிக்கு 320 கனஅடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு 93 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications