சாத்தனூர் அணை படிப்படியாகவே திறக்கப்பட்டது.. சட்டசபையில் எடப்பாடி கேள்விக்கு ஸ்டாலின் பதில்
சென்னை: இன்று சட்டசபையில், சாத்தனூர் அணையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் 5 முறை எச்சரிக்கை அளித்து, படிப்படியாக தான் அணை திறந்துவிடப்பட்டது என்றும், அதிமுக ஆட்சியில் தான் செம்பரம்பாக்கம் அணையை எந்த முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டதாகவும் பதில் அளித்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 செமீ மழை பதிவானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாத்தனூர் அணையில் இருந்து எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 2.60 லட்சம் லிட்டர் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தான் வெள்ளம் மற்றும் பாதிப்பு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று விமர்சித்தனர்.
இதற்கு அப்போதே பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னறிவிப்பு வெளியிட்டு தான் அணை திறக்கப்பட்டதாகவும், இதனால் தான் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் ஒலித்தது. 2 நாள் கூட்டமாக நேற்றும் இன்றும் தமிழக சட்டசபை கூடியது. நேற்று சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாத்தனூர் அணை திறப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதே கருத்தை பாமகவும் தெரிவித்து இருந்தது.
அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 5 முறை எச்சரித்த பின்னரே சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டது. முன்னறிவிப்பு வெளியிட்டு படிப்படியாக திறக்கப்பட்டதால் தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தான் உண்மை. அதிமுக ஆட்சியில் தான் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டது. இதனால் தான் அப்போது வெள்ளம் ஏற்பட்டது. என்று கூறினார்.
-
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications