சென்னை அருகே . . 70 ஆண்டு பழமையான ஆலமரம். . அலேக்காக தூக்கி வேறு இடத்தில் நட்ட அதிகாரிகள். .

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே கால்வாய் அமைக்கும் பணிக்காக 70 ஆண்டு பழமையான ஆலரமரத்தை கிரேன் உதவியுடன் அதிகாரிகள் வேரோடு பிடிங்கி 100 மீட்டர் தூரத்தில் நட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பரந்திப்புத்தூர் ஊரில் நீர்வளத்துறையின் சார்பில் கால்வாய் அமைகும் பணிகள் நடந்து வந்தது. இதற்காக அந்த சாலையின் ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

70 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

70 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

இந்தநிலையில், அந்த கால்வாய் அமைப்பதற்கு அங்குள்ள ஒரு பெரிய ஆலமரம் ஒன்று குறுக்கீடாக இருந்துள்ளது. இதையடுத்து இந்த ஆலமரத்தை அகற்ற அதிகார்கள் முடிவெடுத்தனர். அதன்படி, அதிகாரிகள் இந்த ஆலமரத்தை அகற்றுவதற்காக ஜேசிபி வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். 70 ஆண்டுகள் பழமையான ஆலமரம் என்பதால் நீர்வளத்துறை அதிகாரிகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அங்கிருந்த 70 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலமரம் 100 மீட்டர் தொலைவில் நட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அந்த ஊர் மக்களும் மரத்தை அகற்ற சம்மதம் தெரிவித்தனர்.

வேரோடு பிடுங்கப்பட்டது

வேரோடு பிடுங்கப்பட்டது

இதனை தொடர்ந்து அதிகாரிகள் 70 ஆண்டுகள் பழமையான அந்த ஆலமரத்தை வேரோடு பிடுங்குவதற்கான பணிகளை தொடங்கினர். இதற்காக மரம் வெட்டும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு முதல் கட்டமாக அந்த மரத்தின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து வேரோடு பிடுங்குவதற்காக அந்த மரத்தின் அடிப்பகுதியில் பள்ளமும் தோண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆலமரம் வேரோடு அகற்றப்பட்டு அதன் அருகே வேறு இடத்தில் சுமார் 100 மீட்டர் தொலைவில் நடப்பட்டது.

 கால்வாய் அமைக்கும் பணி

கால்வாய் அமைக்கும் பணி

தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடனும், நவீன தொழில்நுட்பத்துடனும் ஆலமரம் நட்டு வைக்கப்பட்டது. ஆலரமரம் அகற்றப்படாமல் மீண்டும் வேறு இடத்தில் நடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'போரூர் ஏரியை சுற்றி மழைக்காலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அதை தவிர்க்கும் வகையில் இங்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இதற்கு உதவியது. முதல்கட்டமாக கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலையில் இருந்து பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

 100 மீட்டர் தொலைவில்

100 மீட்டர் தொலைவில்

சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த மரத்தின் பெரிய கிளைகள் முதலில் வெட்டப்பட்டன. பின்னர் 3 ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் அந்த மரம் பாதுகாப்பாக 100 மீட்டர் தொலைர் நடப்பட்டது. அதன் வேர்கள் பாதுகாக்கப்படும். இதற்காக அந்த மரத்தை வைத்த இடத்தில் மாட்டுச்சாணம், மண்புழு உரம் மற்றும் வேரின் வளர்ச்சியை தூண்டும் உரங்கள் போடப்பட்டுள்ளது. சில மாதங்களுங்கு இந்த ஆலமரத்தின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+