வருகிறது குடிநீர் பஞ்ச அபாயம்.. சென்னை ஏரிகளில் நீர் இல்லை.. மழையும் பொய்த்தது

சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் சென்னைக்கு ஆபத்து வரப்போவதாக கூறப்படுகிறது.

பருவ மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பருவ மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏரிகள் நிரம்பவில்லை

ஏரிகள் நிரம்பவில்லை

சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைகளாக இருப்பது பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்தான். ஆனால் இந்த ஏரிகளில் இப்போது நீர் குறைப்பு குறைந்து வருகிறது. 2, 3 புயல்கள் வந்துபோன நிலையில், சென்னையில் சொல்லிக் கொள்ளும்படி மழை இல்லை. சாலைகளில் நீர் பெருக்கெடுத்ததே தவிர, முக்கிய ஏரிகள் நிரம்பவில்லை.

வானிலை ஆர்வலர்கள்

வானிலை ஆர்வலர்கள்

எப்படியும் 2 மாசத்துக்கு மழை இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் ஏரிகளை நிரப்பும் அளவுக்கு மழை பெய்யாது என்றே வானிலை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி ஆகும். ஆனால், நேற்று முன்தினம், இதில், 1,495 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. ஆனால் மண்ணை குளிர்க்குமே தவிர ஏரிகளை நிரப்பாது.

அதிகாரிகள் எச்சரிக்கை

அதிகாரிகள் எச்சரிக்கை

இன்னொரு பக்கம் ஏரிகளில் இருக்கும் நீரும் ஆவியாகி கொண்டிருக்கிறது. இதுசம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகத்தில் இருக்கும் 14,098 ஏரிகளில், 5751 ஏரிகளில்தான் 25 சதவீதம் வரை நீர் இருப்பு இருக்கிறது.

குடிநீர் பஞ்சம்

குடிநீர் பஞ்சம்

சென்னையை பொறுத்தவரை, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது, இதில் மழையும் போதுமான அளவு பெய்யவில்லை, இதே நிலை நீடித்தால், இன்னும் 3 மாதத்தில் சென்னைக்கு கடுமையான குடிநீர் பஞ்சம் வந்து சூழும் என்று எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+