விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம்.. மமதா பானர்ஜி திட்டம்!
சென்னை: 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு மமதா பானர்ஜி கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடமாக மக்கள் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020; விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்ட (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020. ஆகிய மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று விவசாய சங்க தலைவர்களை மமதா பானர்ஜி சந்தித்தார். விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும், சம்யுக்த் கிஷன் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் உடன் சந்திப்பு நடத்தினார்.
இதில், மேற்கு வங்கத்தில் விவசாயிகள் நடத்தப்படும் விதம் நன்றாக இருப்பதாக விவசாயிகள் மமதா பானர்ஜியிடம் குறிப்பிட்டனர். இந்த நிலையில் விவசாயிகளிடம் பேசிய மம்தா பானர்ஜி, நாங்கள் விவசாய போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஆதரித்து வருகிறோம்.
இது தொடர்பாக நாங்கள் சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம். இது தொடர்பாக மற்ற மாநில முதல்வர்களிடம் பேசுவேன். இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவேன், என்று விவசாயிகளுக்கு மமதா பானர்ஜி உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் மமதா பானர்ஜி டெல்லி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications