Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு.. எப்படி இப்படி?” - திமுக பொதுக்குழுவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உங்களைப் பார்த்து நாங்கள் அனைவரும் கொஞ்சம் பொறாமைப்படுகிறோம் என திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழுவில் திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வாழ்த்திப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் உழைப்பை வியந்து பாராட்டியுள்ளார்.

திமுக உட்கட்சி தேர்தல்

திமுக உட்கட்சி தேர்தல்

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இதையடுத்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4,100 பேர் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மீண்டும் தலைவராக ஸ்டாலின்

மீண்டும் தலைவராக ஸ்டாலின்

பொதுக்குழுவில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மீண்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, தணிக்கைக் குழு உறுப்பினர்களாக பிச்சாண்டி, வேலுச்சாமி, முகமது சகி, சரவணன் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

திமுக-வின் துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

 உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்திப் பேசி வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு பொதுக்குழு எப்படி நடத்தவேண்டும் என்று உலகித்திற்கே எடுத்துக்காட்டும் வகையில் பொதுக்குழுவை நடத்தி வரும் தலைவர் அவர்களே.." என தனது பேச்சைத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

 வாழ்த்த வயதில்லை

வாழ்த்த வயதில்லை

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்றார். அது அவருக்கு பொருந்துமோ இல்லையோ கண்டிப்பாக எனக்கு பொருந்தும் என்றார். மேலும், தேர்தல் ஆணையாளர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோரையும், துணை பொதுச் செயலாளர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

 அத்தை கனிமொழி

அத்தை கனிமொழி

மேலும், 'இந்த பொதுக்குழுவில் புதிதாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்னுடைய அத்தை, நம்முடைய தலைவரின் தங்கை, தலைவர் கருணாநிதியின் அன்பு மகள், அத்தை கனிமொழி கனிமொழி அவர்களே..'என உதயநிதி ஸ்டாலின் பேசியதும் மேடையில் இருந்த கனிமொழி வெட்கத்தோடு சிரித்தார். பொதுக்குழுவில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கடமை கண்னியம் கட்டுப்பாடு

கடமை கண்னியம் கட்டுப்பாடு

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "கடந்த 4 ஆண்டுகளாக நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருந்தாலும், கழகத்தின் இதயத்துடிப்பான பொதுக்குழுவில் இந்தச் சிறியவனுக்கு பேச வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி. கருணாநிதி இருந்திருந்தால் கட்சித் தேர்தலை எப்படி கடமை கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தியிருப்பாரோ அதேபோல் நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.

4 ஆண்டுகளில் தொடர் வெற்றி

4 ஆண்டுகளில் தொடர் வெற்றி

2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தமிழக முதல்வராக அமரவைத்து அழகுபார்த்திருக்கிறார்கள். திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நீங்கள் பார்த்த அத்தனை தேர்தல்களிலும் வெற்றி தான். கிட்டத்தட்ட 4 தேர்தல்களில் தொடர்ர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த வெற்றி நிச்சயமாகத் தொடர்ம்.

பொறாமையாக இருக்கிறது

பொறாமையாக இருக்கிறது

தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் உங்கள் உழைப்பைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகவே இருக்கும். எப்படி இவர் இவ்வளவு தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று. திமுகவின் பெரிய வெற்றிக்கு உங்களின் 50 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட ஆண்டு கால உழைப்பே முக்கிய காரணம்." எனப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+