தமிழ்நாட்டில் பேய் ஆட்சி.. திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை
சென்னை: எத்தனையோ முறை பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தாலும் இந்த முறை அவரது குடும்பத்தினரைப் பார்க்க சென்னைக்கு வந்திருக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நாம் அனைவரும் மோடியின் குடும்பத்தினர் என்று கூறினார். தமிழ்நாட்டில் பேய் அரசாள்வது போல உள்ளது அதனை அகற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர் செல்கிறார். கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். கல்பாக்கத்தில் இருந்து மீண்டும் விமான நிலையம் வந்து சாலை மார்க்கமாக நந்தனம் வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு புலி படம் பொறித்த பட்டு சால்வை பரிசளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் கூறியுள்ளது. 142 கோடி மக்கள் அனைவரும் மோடியின் குடும்பத்தினர்தான். எத்தனையோ முறை மோடி சென்னைக்கு வந்தாலும் இம்முறை நம்முடைய குடும்பத்தை பார்க்க வந்துள்ளார்.
திமுகவினருக்கு கோபாலபுரத்து குடும்பம்தான் தெரியும் அதே போல பீகாரில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் கண்களுக்கு தெரியும். மோடிக்கு நாட்டு மக்கள் அனைவருமே குடும்பம்தான். வரும் தேர்தலில் நாம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் சொன்னது போல தமிழ்நாட்டில் தற்போது பேய் அரசாள்கிறது. அந்த ஆட்சியை நாம் அகற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். ஒரே வாரத்தில் 2 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் பிரதமர் மோடி. பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுவதை கேட்பதற்காக ஏராளமான தொண்டர்கள் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் குவிந்துள்ளனர்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications