அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்.. அடித்து சொன்ன அமித் ஷா.. அப்போ அண்ணாமலை? அடடா பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.

சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை பேசியதாக கூறப்படும் இந்த விஷயங்கள்தான் அரசியல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படி அந்த கூட்டத்தில் அண்ணாமலை என்னதான் பேசினார்?

அண்ணாமலை என்ன சொன்னார்?

அண்ணாமலை என்ன சொன்னார்?

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

குனிய முடியாது

குனிய முடியாது

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அமித் ஷா சந்திப்பு

அமித் ஷா சந்திப்பு

இதற்கு இடையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். அதில் கூட்டணி பற்றி பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக எம்பிகளை பெறுவதை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். 2024 முக்கியம் இல்லை. 2026தான் முக்கியம். 2024ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாம் எப்போதும் 3வது இடத்திலேயே இருப்போம். நாம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்பதே முக்கியம், அதை செய்ய நாம் தனித்து களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

அதாவது அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம். நாங்கள் தொலைதூர கிராமங்களில் இருக்கும் வாக்குசாவடிகளை கூட அடைந்து இருக்கிறோம். எங்கெல்லாம் பாஜக வலிமை இல்லாமல் இருந்ததோ அங்கெல்லாம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம்.

வலிமை

வலிமை

தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+