“மன்னிப்பு கேட்க முடியாது போடா”.. திமுக ஸ்டைலில் பாஜகவின் டி-ஷர்ட் ’ரிப்ளை’! ஆஹா.. இது அதுல்ல!?
சென்னை : இந்தி திணிப்பு விவகாரத்தில் "இந்தி தெரியாது போடா" என்று டி-ஷர்ட் மூலம் பாஜகவுக்கு திமுக பதிலடி கொடுத்தது. அதேபோல, தற்போது "மன்னிப்பு கேட்க முடியாது போடா" என்ற வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து திமுகவுக்கு எதிர்வினையாற்றியுள்ளனர் பாஜகவினர்.
அண்மையில் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் விவகாரத்தில், அவதூறு பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை பதில் அளித்த நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள், "மன்னிப்பு கேட்க முடியாது போடா" என்று டி-ஷர்ட் மூலம் திமுகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.

திமுக நோட்டீஸ் : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்துப் பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டார். இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றினர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், அவதூறு பரப்பியதற்காக இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும், அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வக்கீல் மூலம் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், "திமுகவினர் சொத்து குறித்து வெளியிட்ட செய்தி உண்மை. திமுகவினர் மீதான புகாருக்கு ஆதாரம் இருக்கிறது. இதில், மன்னிப்பு கேட்க மாட்டேன். இழப்பீடும் வழங்க முடியாது. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்" என்று தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்க முடியாது : இதைத் தொடர்ந்து, அண்ணாமலையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் மற்றும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், "மன்னிப்பு கேட்க முடியாது போடா" என்கிற வாசகம் அச்சிட்ட டி-ஷர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குநர் வெற்றிமாறன் கடந்த 2020 ஆம் ஆண்டில் டெல்லி சென்றிருந்தபோது இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து, இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து திரையுலகினர் பலரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

திமுகவுக்கு பதிலடி : இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற அலுவலக மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடந்தபோது, பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழியை உள்ளூர் மொழிக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் தற்போது பாஜகவினர், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'மன்னிப்பு கேட்க முடியாது போடா" என திமுக ஸ்டைலிலேயே டி-ஷர்ட் வாயிலாக எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறினால் நெருப்பில் குதித்து சாவேன்.. துரைமுருகன் ஆவேசம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக











Click it and Unblock the Notifications