கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் சொல்ற அனைத்தையும் ஏற்றுக்க முடியாது.. அமைச்சர் ராஜ்மோகன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்முகம் சொல்வதில் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொள்வோம். எது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை பேச்சுக் குறைவு செயல் அதிகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

We cannot accept everything the Communist Party s Shanmugam says - Minister Rajmohan

தோழர் சண்முகம் அவர்களுடைய அனுபவம்தான் எங்கள் வயது. அவர் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக போராடினார். அவர் பொதுவுடமைவாதி. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசுவார். அவர் பேசுவது அவர் உரிமை. அதில் எதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமோ.. எது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

வெளிப்படையாக இருக்கிறோம். நாங்கள் எடுத்தது தான் சரி.. நீங்கள் சொல்வது தப்பு.. அப்படி இல்லை. எது நடைமுறைக்கு சாத்தியமோ அதை எடுப்போம். சட்டமன்றத்தில் நடைபெற்றதே அனைத்துக்கட்சி கூட்டம்தான். எதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை பேச்சுக் குறைவு செயல் அதிகம்.

சண்முகம் சொல்வதில் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொள்வோம். அவர் சொல்கிற அனைத்திலுமே அனைத்து கட்சி கூட்டம் மட்டும்தான் தீர்வாக அமையும் என்கிறார். இல்லை. இன்னும் நிறைய தீர்வுகள் இருக்கு.. தீர்வை நோக்கி நகர்கிறோம்" என்றார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பெ சண்முகம் தவெகவை கடுமையாக விமர்சித்தார். பெ சண்முகம் கூறுகையில், தவெகவுக்கு மக்கள் 34 சதவீதம் பேர்தான் வாக்கு அளித்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம், அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது. இடதுசாரிகள் உள்பட இதர கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது. தான்தோன்றித்தனமாக அரசு செயல்படக்கூடாது. அரசு செயல்பட்டால் வேறு விதமான முடிவுகளை நோக்கி நாங்கள் செல்ல வேண்டியிருக்கும்" என்று பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+