ச்சே.. இவ்ளோ நாளா இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கே.. நாம் அறிந்திராத சில சுவாரசிய உண்மைகள்

பரந்து விரிந்த இந்த உலகில் நாம் அறிந்த விஷயங்கள் மிக சொற்பம் தான். அறிந்திடாத பல உண்மைகள் கடல் போல் உள்ளன. அதற்காக கடலில்தான் நாம் கேள்வியே படாத பல விஷயங்களும் இருக்கிறதே இதில் என்ன வியப்பதற்கு என்று நினைத்து விடாதீர்கள்..
நம் கண் முன்னே தினமும் பல உயிரினங்களைப் பற்றியும் ஏன் நம்மைப் பற்றியும் கூட சில விசித்திரமான உண்மைகளை நாம் அறிந்து கொள்ளாமல்தான் இருக்கிறோம்.. சின்ன சின்ன விஷயங்களாகவே இருந்தாலும் அதைப் பற்றி நாம் யோசித்து இருக்க மாட்டோம் எல்லது அப்படி ஒன்று இருப்பதே நமக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.
நமக்கு மிகவும் பரிட்ச்யமான சில உயிரினங்கள் மற்றும் நம்மை பற்றியும் சில சுவாரசியமான உண்மைகளைத் தான் நாம் இங்கே கண இருக்கிறோம். சுறு சுறுப்புக்கு உதாரணம் காட்டப்படும் எறும்புகள் எப்போது ஓய்வு எடுக்கும் என்று நினைத்து இருக்கிறீர்களா? ஆம் ஏறும்புகள் கூட ஓய்வு எடுக்குமாம். அதாவது 12 மணி நேரத்தில் சுமார் 8 நிமிடங்கள் வரை எறும்புகள் ஓய்வு எடுக்குமாம்
பல வண்ணங்களில் கண்முன்னே ஆழகாக பறந்து செல்லும் வண்ணத்து பூச்சிகளை நாம் பார்த்து இருப்போம். அதுவும் கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லும் நகரவாசிகளின் பிள்ளைகள் வியப்பாக வண்ணத்து பூச்சிகளை பார்ப்பார்கள். இந்த வண்ணத்து பூச்சிகள் தனது கால்களில் தான் சுவையை உணருமாம்.
* முதலைகளால் அதன் நாக்கை வெளியே நீட்டி வைத்திருக்க முடியாது. குதிக்க முடியாத ஒரு விலங்கினம் எதுவென்றால் அது யானை மட்டுமே..
* உணவுப் பொருள் அனைத்து கெட்டுப்போகக் கூடியதுதான். ஆனால், தேன் மட்டும் இதில் விதி விலக்கு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதாம்.
* குளிர்ந்த நீரை விட வெப்பமான நீர்தான் விரைவாக பனிக்கட்டிகளாக மாறும்.அப்படியா என மூக்கின் மேல் விரல் வைக்காதீர்கள்.. இன்னொரு விஷயமும் இருக்கு... உங்கள் முழங்கையை உங்கள் நாக்கினால் தொடமுடியுதா என்று பாருங்கள்...
* கை விரல் ரேகையை போலவே நாக்கிலும் ரேகைகள் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதிரியானவையாக இருக்குமாம்.
* உலகில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான பெயர் முகம்மது என்பது தான்.
* நத்தைகளை பொறுத்தவரை மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் வல்லமை கொண்டதாம்.
* நம் உடலில் வலுவான தசைகளை கொண்ட உறுப்பு நாக்குதான்.
* துருவக் கரடிகள் என்று அழைக்கப்படும் பனிக்கரடிகள் இடது கை பழக்கம் கொண்டவை ஆகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications