ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி.. மகன் அமீனின் முதல் ரியாக்ஷன் இதுதான்.. 16 வார்த்தையில் பதிவு
சென்னை: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஏஆர் ரஹ்மான் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் அவரது மகன் ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் 16 வார்த்தைகளில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்' விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவரது மனைவிக்கு பெயர் சாய்ரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 19995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர்.

இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.
சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே யாரும் பாலமாக வந்து ஒன்றிணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஏஆர் ரஹ்மான் இன்னும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் ஏஆர் ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் முதல் ரியாக் ஷனை வெளிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானுவின் மகன் ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வார்த்தைகளில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛ இந்த நேரத்தில் எங்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட உணர்வுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். உங்களின் புரிதலுக்கு நன்றி'' என்று ஆங்கிலத்தில் 16 வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். தமிழ் திரையுலகில் சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார் யார் என்றால் ஏஆர் ரஹ்மானின் உடன்பிறந்த சகோதரியின் மகன் ஆவார். அதாவது ஜிவி பிரகாஷ் குமாருக்கு, ஏஆர் ரஹ்மான் தாய்மாமன் முறை வரும்.
ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி ஆகியோர் பிரிவதாக அறிவித்த சில மாதங்களிலேயே ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவதாக கூறியுள்ளனர். இப்படி அடுத்தடுத்த 2 சோகமான சம்பவங்களால் ஏஆர் ரஹ்மான் குடும்பத்தினர் சோகத்தில் உறைந்துள்ளனர். அதேபோல் ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களுக்கு இன்றைய அறிவிப்பு என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications