"பதில் சொல்லாம ஊமையா இருந்துட்டு போக நாங்க இங்க வரல"- கோபமாக பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்களை விமர்சிக்கும் போது பதிலளிக்காமல் வாய்மூடி இருப்பதற்கு நாங்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. தடிமனான வார்த்தைகளை தவெகவினர் பயன்படுத்துகின்றனர். எங்களுக்கும் பதிலுக்கு பதில் பேச தெரியும்" என சட்டசபையில் இன்று கோபமாகப் பேசியுள்ளார் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மின் துறையில் திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாகவும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் பற்றியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தற்போதைய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

We Know How to Give a Fitting Reply Senthil Balaji Hits Back in Assembly

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசும்போது, "கடந்த ஆட்சியில் மின்துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். 2021-க்கு பின்னர் மின்துறை அமைச்சர் சிறைக்குச் செல்கிறார். பின்னர் இன்னொரு அமைச்சர், இன்னொரு அமைச்சர் என மின்துறைக்கு 4 அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் வந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசுகையில், "தவெக அரசில் 5 ஆண்டுகளில் மின் துறையில் கடனே வாங்க மாட்டீர்களா? கடன் அதிகரிக்காதா? புதிய திட்டங்களுக்கு அரசு நிதிகளைக் கொடுக்குமா? அல்லது முதல்வரிடம் நிதி கேட்டு மின்வாரியத்தில் கடன் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வீர்களா?.

திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல், விசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்று அமைச்சர் சொல்கிறார். தவெக அரசில் மாற்றமே இருக்காதா? என்பதைப் பார்க்கலாம். மேலும், அமைச்சரை மாற்றுவது முதல்வரின் விருப்பம். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.

தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, "எங்களை விமர்சிக்கும் போது பதிலளிக்காமல் வாய்மூடி இருப்பதற்கு நாங்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. ஒரு வார்த்தை பேசும்போது மறு வார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். ஊமையாக இருந்துவிட்டுப் போக நாங்கள் இந்த சபைக்கு வரவில்லை" என கோபமாகப் பேசியுள்ளார் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+