ரொம்பவே Miss பண்றோம் வி.பி.சிங்கை.. உருகிய ஸ்டாலின்! சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் நினைவு நாள் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர், வி.பி.சிங் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. இன்றைய நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விபி சிங் பற்றின தங்கள் நினைவுகளையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில், விபி சிங் குறித்து உருக்கமான அஞ்சலியை முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மறைந்த பிரதமர் விபி சிங் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை புகழ்ந்து மேடைகளில் பேசியிருக்கிறார்.. குறிப்பாக, "திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி. சிங்.

V P Singh MK Stalin

பாஜக ஆட்சியை கவிழ்த்து

சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும் - நிலைநாட்டியும் வரும் பாஜக கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

அதுமட்டுமல்ல, வி.பி.சிங் பிரதமர் பதவியில் 11 மாதங்கள் இருந்தாலும் கூட அவர் செய்த சாதனைகள் எண்ணற்றவை என்று கூறிய ஸ்டாலின், 11 மாதங்களில் விபி செய்த சாதனைகள் என்ன என்பதையும் ஒருமுறை லிஸ்ட் போட்டு கூறியிருந்தார்.

விபி சிங் செய்த சாதனைகள்

- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குத் தொடக்கப்புள்ளி
- தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குத் தொடக்கப்புள்ளி
- வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது
- லோக்பால் சட்டத்துக்குத் தொடக்க முயற்சிகள்
- தேர்தல் சீர்திருத்தங்கள்
- அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது
- நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம்
- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்
- உழவர்கள் பிரச்சனையைத் தீர்க்க மூன்று குழுக்கள்
- டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்
- அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிட உத்தரவு
- நுகர்வோர் பாதுகாப்பு

இன்று விபி சிங் நினைவு நாள்

- போன்ற எண்ணற்ற செயல்களை செய்து காட்டியவர் விபி சிங் என்று முதலமைச்சர் பாராட்டியதை மறக்க முடியாது.. இந்நிலையில் இன்று விபி சிங்கின் நினைவுநாளில், "சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்" என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

'Miss' செய்கிறோம்

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்"நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!

தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!

பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!

தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!

#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.

சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+