என்ஜிஓ அரசியல்.. இளைஞர்களை ஒருங்கிணைக்கும் அண்ணாமலை.. பின்னணியில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு என்ஜிஓ நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருவதாக தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என்று செயல்பட்டு வரும் என்ஜிஓ அமைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மாவட்ட வாரியாக அண்ணாமலை தனது அமைப்பில் இணைத்து வருவதும் தெரிய வந்துள்ளது.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலமாக முதற்கட்டமாக பல்வேறு பொதுக்கூட்டம், பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். முதலில் போதைப் பொருள் விழிப்புணர்வு மாநாடு நடத்திய அண்ணாமலை, தொடர்ந்து சுற்றுச்சூழல் பிரச்சனையை கையில் எடுத்தார்.

Annamalai BJP NGO

இதன்பின் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கடற்கரை மற்றும் நதியில் இருந்து கொஞ்சம் குப்பையை அகற்றினார். இதனைத் தொடர்ந்து மகளிர் முன்னேற்றம் என்று மாநாடு நடத்திய அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் வீ தி லீடர்ஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த விஷயங்களுக்காக அண்ணாமலை இதுவரை எந்தவொரு தீவிரப் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கவில்லை.

முழுக்க முழுக்க அரசியல் பேச்சுகள் மட்டுமே அண்ணாமலையின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த என்ஜிஓ அமைப்புகள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் ஆதரவை தங்கள் பக்கம் அண்ணாமலை திருப்ப முயல்வதாக பார்க்கப்படுகிறது. வீ தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய பின் அண்ணாமலை தொடர்ச்சியாக கல்லூரி விழாக்களில் பங்கேற்றார்.

அண்ணாமலை இந்த கல்லூரி விழாக்களில் பங்கேற்றதற்கு பின்னணியில் என்ஜிஓ அமைப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் மதுரையில் இருந்து மட்டும் சுமார் 12 என்ஜிஓ அமைப்புகள் அண்ணாமலையுடன் கைகோர்த்துள்ளன. அவரின் அரசியலுக்கு அல்லாமல், அண்ணாமலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புக்கு ஆதரவு என்று கூறுகின்றனர்.

முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் ஆதரவு இருந்து வரும் சூழலில், அதில் அண்ணாமலை சிறு சிறு பாதிப்புகளை உண்டாக்க தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அண்ணாமலையின் இந்த என்ஜிஓ அரசியலுக்கு பின்னணியில், அமர் பிரசாத் ரெட்டி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+