இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கை தீபங்களை காப்போம் - முக ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 3 கொள்கை தீபங்களை எந்நாளும் காத்து, கடைப்பிடிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அவரது மூன்று கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம்! கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் திமுகவினரால் தக்க தனிமனித இடைவெளியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

We will always uphold Annas duty, dignity and restraint - MK Stalin

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தொண்டர் படை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைவர் மு க ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கொடியை ஏறிவைத்து பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரது திரு உருவ படத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர், பொருளாளர் என பலரும் மரியாதை செலுத்தினர்.

We will always uphold Annas duty, dignity and restraint - MK Stalin

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

We will always uphold Annas duty, dignity and restraint - MK Stalin

அண்ணா பிறந்நாளை முன்னிட்டு மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அவரது மூன்று கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம்! கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

We will always uphold Annas duty, dignity and restraint - MK Stalin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+