பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. திமுக நம்மை ஏமாற்றுகிறது.. மகளிர் தினத்தன்று வீடியோ வெளியிட்ட விஜய்!
சென்னை: மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ள விஜய், எல்லா சூழல்களிலும் ஒரு மகனாக, தோழனாக, அண்ணனாக உங்களுடன் நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட தொடங்கி இருக்கிறார். நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் குல்லா மற்றும் வேஷ்டி அணிந்து விஜய் பங்கேற்றது இஸ்லாமியர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டு மகளிருக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் விமர்சித்து நேரடியாக திமுகவை அட்டாக் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுக்க இருக்க என் அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று அத்தனை பேருக்கும் இந்த நாளில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே.. பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்..
அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே.. இப்படி நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.. நாம் எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக் கூடியது, மாற்றத்திற்கு உரியதுதானே.. கவலைப்படாதீர்கள்.
2026ல் நீங்கள் எல்லாம் சேர்ந்து.. இல்லை.. நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம். அதற்கு இந்த மகளிர் தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களின் மகனாக, அண்ணனாக, தோழனாக, தம்பியாக உங்களுடன் நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்!












Click it and Unblock the Notifications