அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சனம் செய்வோம்.. எங்க ஆளுங்க சும்மா விட மாட்டாங்க.. ஜெயக்குமார் பரபர!
சென்னை: அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம், ஒரு கருத்து சொன்னால் ஓராயிரம் கருத்து பதிலடியாக வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகார் அளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறிச் செயல்படுகிறார். அண்ணாமலையை இனி எங்கள் ஆட்கள் விடமாட்டார்கள்.

ஒரு கருத்து சொன்னால் ஓராயிரம் கருத்து பதிலடியாக வரும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம், அவரை கட்டுப்படுத்துங்கள் என்று பாஜக மேலிடத்திலும் சொல்லி இருந்தோம். அதிமுக கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள், ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அண்ணாமலை ஒரு கோழை, தனியாக நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? நோட்டாவுக்கு குறைவாகத்தான் வாக்கு பெறுவார். அண்ணாமலைக்கு இங்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. 2024 தேர்தலில் பாஜகவால் ஒன்றும் கிழிக்க முடியாது. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அண்ணாமலையின் பேச்சை தன்மானம் உள்ள எந்த அதிமுக தொண்டனும் ஏற்க மாட்டான்.
பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சியின் நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்." என அதிரடியாக தெரிவித்தார் ஜெயக்குமார்.
தொடர்ச்சியாக அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. முன்பு ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை அண்மையில் அண்ணா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொந்தளித்தனர். அதற்கும் கடுமையாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. இந்தச் சூழலில் பாஜக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், அண்ணாமலையை இனி விட மாட்டோம் என்றும் அதிரடியாக முடிவெடுத்துள்ளது அதிமுக.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications