சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி - வி.பி துரைசாமி

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என்ற நிலை மாறி இப்போது பாஜக எதிர் திமுக என்ற நிலை உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று பாரதீய ஜனதாக கட்சியின் தமிழக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணிக்கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நாளொரு காட்சிகள், பேட்டிகள் என தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

We will meet elections in Tamil Nadu under the BJP-led alliance - VP Duraisamy

ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க தற்போதே பிரச்சாரத்தை மறைமுகமாக ஆரம்பித்து விட்டது. எதிர்கட்சியான திமுகவோ இந்தமுறையாவது ஆட்சியை பிடித்து அரியணை ஏறி விட வேண்டும் என்று போராடி வருகிறது.

சட்டசபைக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பல கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏ கனவில் வலம் வருகின்றனர். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் 2021 சட்டசபைத் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக இருப்பார்கள் என்று கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் முருகன். அவரது பேட்டி அப்படி இருக்க மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமியோ, தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியே தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார். அதிமுக vs திமுக என்ற நிலை மாறி தற்போது பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குய்யா... எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார் ஆர்.பி உதயகுமார்கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குய்யா... எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார் ஆர்.பி உதயகுமார்

பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன்தான் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ள வி.பி துரைசாமி, மத்தியில் பாஜக ஆட்சி உள்ளதால் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான கூட்டணியே தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார் துணைத்தலைவர் வி.பி துரைசாமி. தேர்தல் நெருங்க நெருங்க யார் யார் எந்த கூட்டணியில் இணைவார்கள், விலகுவார்கள் என்பது தெரிய வரும்.

English summary
VP Duraisamy Tamil Nadu Deputy Leader of the Bharatiya Janata Party (BJP), has said that the party will form an alliance with whichever party is following the BJP in Tamil Nadu. He also said that the BJP-led coalition parties would contest the assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X