பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து-முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபர பேச்சு! ஷாக் ஆன திருமண விழா!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் தாம் இம்மியளவும் கவலைப்படப் போவது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

முரசொலியில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர்; முரசொலியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர்; திராவிடர் இயக்க கணணி என்று போற்றப்படுகிறவர் திருநாவுக்கரசு.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மகளிருக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஆட்சிக்கு வந்தால் ரூ15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார் மோடி. ரூ15,000 அல்லது ரூ15 இதுவரை தரப்பட்டுள்ளதா? இதை பற்றி சிந்தித்து இருக்கிறார்களா? மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதி என்னவாயிற்று? இந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. விவசாயிகள் நலன் காப்போம் என்றார்கள். ஆனால் டெல்லியில் விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் போராடினார்கள்.. நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயினர்.. கடும் வெயில், கடும் குளிர், மழைக்கு நடுவே போராட்டம் நடத்தினர் விவசாயிகள்.
மத்தியில் ஆளும் மோசமான சர்வாதிகார மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்குதான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். அடுத்ததாக ஜூலை 17,18-ல் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆலோசனை நடைபெற உள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் பிரதமர் மோடி பதற்றப்படுகிறார். இந்த பதற்றத்தில் தாம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பிரதமர் மோடி உளறிக் கொண்டிருக்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications